பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - ஞானசம்பந்தர் சம்பந்தர் திருவிழிமிழலையில் எழுந்தருளியிருக்கும் போது அவரைச் சேவிக்க விரும்பிய காழி நகர மக்கள் திருவீழிமிழலைக்கு வந்து ஞானக்கன்றைச் சேவித்து தங்க ளுடன் காழியம்பதிக்கு எழுந்தருளுமாறு வேண்டுகின்றனர். அவர்களது விருப்பத்தை யுணர்ந்த பிள்ளையார் “இன்று கழித்து நாளை விழிமிழலையான் அருளால் பெற்றுப் புறப் படுவோம்' என்று கூறுகின்றார். அன்றிரவு திருக்கண் வளர்ந்திருக்கும்போது i N மி ழ ைல ப் பெருமான் பிள்ளையாருக்குக் கனவில் தோன்றி யாம் திருத்தோணி புரத்தில் எழுந்தருளியிருக்கும் வண்ணத்தை நீ இன்று மிழலையிற் காண்பாய்' என அருள் செய்து மறைகின்றார். துயில் நீங்கி விழிப்புற்றெழுந்த சிவக்கன்று கைகளைத் தலைமேல் கூப்பி இறைஞ்சித் திருவிழிமிழலைத் திருக் கோயிலிற் புகுந்து விண்ணிழி விமானத்தின் கண்ணே திருத் தோணிபுரத் திருக்கோலத்தைக் கண்டு மகிழ்கின்றார். "மையமரும் பூங்குழல் (1.4) என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றுகின்றார் வேதவாயர். கழல்மல்கு பந்தொ டம்மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள் பொழில்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே எழில்மலரோன் சிரமேந்தி உண்டோர் இன்புறுசெல்வ மிதென்கொல் சொல்லாய் மிழலையுள் வேதியர் ஏத்திவாழ்த்த விண்ணிலி கோயில் விரும்பியதே. (2) என்பது இப்பதிகத்தின் இரண்டாவது பாடல். இத் திருப்பதி கத்தின் பாடல் தோறும் புகலி நிலாவிய புண்ணியனே, மிழலை விண்ணிலி கோயில் விரும்பியது என்கொல்?" என இறைவனை நோக்கி வினவிப் போற்றுகின்றார். ஒன்பதாம் திருப்பாடலில், எறிமழுவோ டிளமான் கையின்றி யிருந்தபிரான் இதுஎன்கொல் சொல்லாய்: '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/231&oldid=856104" இலிருந்து மீள்விக்கப்பட்டது