பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் பெருமானுடன் தலவழிபாடு 187° வேககஞ்செழ ஆங்கேவெரு வொடுமிரிந் தெங்குமோட ஆகந்தன்னில் வைத்தமிர்த மாக்குவித்தான் மறைக்காடே. (7) என்பது ஏழாவது பாடல். அடுத்த பதிகம் சிலைதனை கடுவிடை’ (1.22) என்ற முதற் குறிப்பினையுடைய சந்தப் பதிகமாகும். . கதிமலி களிறது. பிளிறிட உரிசெய்த அதிகுண னுயர்பசு பதியதன் மிசைவரு பசுபதி பலகலையவைமுறை முறையுணர் விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரு மதிநிபுணர்கள்வழி படவளர் . மறைவன மமர்தரு பரமனே. (5). என்பது இபபதிகத்தின் ஐந்தாவது பாடலாகும்.

  • கற்பொலிசுரத்தினெரி (3.76) என்ற முதற் குறிப் பினையுடையதும் வேதவனம்பற்றிய பதிகமாகும்; இதுவும் ஒருவகை சந்தப் பதிகமே. இதில்,

மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்று.சடை கின்று சுழலக் காலையிலெழுந்தகதிர் தாரகை மடங்க அனல் ஆடு மரனூர் சோலையின் மரங்கள்தொறும் மிண்டியின வண்டுமது வண்டி சைசெய வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேத வனமே. (6). என்பது ஆறாம் பாடல். இங்ங்ணம் வேதவனத்தில் தங்கி யிருக்கும் நாட்களில்தான் பாண்டி நாட்டிலிருந்து பிள்ளையாருக்கு அழைப்பு வருகின்றது. பிள்ளையாரும் மதுரைக்கு எழுந்தருள விரும்பி அப்பர் பெருமானுடன் கலந்து யோசித்து தாம் மட்டிலும் போக முடிவு செய் கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/230&oldid=856102" இலிருந்து மீள்விக்கப்பட்டது