பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிமிழலைச் சிறப்பு நிகழ்ச்சிகள் 193 இவ்வாறு அமுது அளித்து வருங்கால் சம்பந்தர் மடத்தில் அடியார்கள் திருவமுது செய்தற்குக் காலம் தாழ் கின்றது. அஃதுணர்ந்த சண்பை வேந்தர் அமுதளிப்பதற்குத் தம்பிடத்தில் காலந் தாழ்ப்பதற்குரிய காரணம் என்ன வெனக் கேட்கின்றார். திருவமுது ஆக்குவோர் பிள்ளை யாரைப் பணிந்து தாங்கள் இறைவன்பாற் பெறும் படிக்காசைப் பெற்றுப் பண்டம் வாங்குவதற்குக் கொண்டு சென்றால் அதற்கு வட்டம் கேட்கின்றனர் என்றும், நாவுக்கரசர் பெற்ற காசை வட்டமின்றி ஏற்றுக்கொள் கின்றனர் என்றும் கூறி, இதுவே காலம் தாழ்த்தற்குக் காரணம் எனத் தெளிகின்றனர். இதனையுணர்ந்த பிள்ளையார், அப்பர் பெருமான் கைத் தொண்டு செய்தலால் அவர் பெறும் படிக்காக வட்டமின்றி ஏற்றுக் கொள்ளப் பெறுகின்றது" எனச் சிந்தித்து அறிகின்றார். *இனி வரும் நாட்களில் தருங் காசு வாசி தீரும்படி இறைவனைப் பாடிப் போற்றுவேன்' எனத் திருவுளங் கொள்ளுகின்றார். மறுநாட் காலையில் விழிமிழலை இறைவனைப் பணிந்து வாசி தீரவே' (1.92) என்று பதிகம் பாடிப் போற்றுகின்றார். இதில், வாசி தீரவே, காசு நல்குவீர் - மாசின் மிழலையீர், ஏச லில்லையே. (1) என்பது முதல் பாடல். இதனால் வாசியில்லாத நல்ல காசு இவருக்கும் கிடைக்கின்றது. பண்டம் வாங்குவதற்குச் சென்று கொடுத்தபோது வணிகர்கள் இக்காசு மிகவும் நன்று; வேண்டுவன தருவோம்' என்று கூறி உணவுப் பொருள்களை வழங்குகின்றனர். அன்று முதல் பிள்ளையார் திருமடத்திலும் அடியார்கள் உரிய காலத்தில் திருவமுது செய்கின்றனர். - இங்ங்னம் இருவருடைய திருமடங்களிலும் எண் ணிறந்த சிவனடியார்கள் திருவமுது செய்து மகிழ்ந் துறையும் காலத்தில் எங்கும் மழை பெய்து வேளாண்மை செழிக்கின்றது. நெல் முதலிய தானியங்கள் நிறைய 13 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/234&oldid=856111" இலிருந்து மீள்விக்கப்பட்டது