பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ஞானசம்பந்தர் விளைகின்றன. உயிர்களெல்லாம் துன்பம் நீங்கி இன்புறு கின்றன. இன்னொரு செய்தியும் ஈண்டு அறிதற்பாலது. பிள்ளையார் வாசி தீரவே காசு நல்குவீர்” என வெளிப் படையாக வேண்டுதலால் இப்பதிகம் பிள்ளையார் பெற்ற படிக்காசின் வட்டம் தீர்தற் பொருட்டு அருளிச் செய்யப் பெற்றதென்பது தெளிவாகும். இங்ங்னம் பாடிப் போற்றிய சண்பை வேந்தரின் வேண்டுகோட்கிணங்க விழிமிழலைப் பெருமான் வாசி தீரக் காசு அளித்தருளினார் என்பது வரலாறு. நாவுக்கரசர் பெருமானும் தம் ஆருயிர் நண்பர் வேணுபுரத்தாரைப் பேசும் நிலையில், - பாடிப் பெற்ற பரிசில் பழங்காசு - வாடி வாட்டம் தவிர்ப்பா ரவரைப்போல (5-50:7) என்று வாய்மூர்ப் பதிகத்தில் புகழ்ந்து போற்றுதலால் இந்த வரலாற்றின் உண்மை தெளிவாகும். ஞானசம்பந்தர் பெற்ற காசு வாசியுளதாதற்கு அதன் பழமையே காரணம் என்பதை பரிசில் பழங்காசு’’ என்ற தொடரால் வாகீசப் பெருமான் நன்கு விளக்கியுள்ளமை கண்டு தெளியலாம். இனி, திருவிழிமிழலையில் தங்கியிருந்த காலத்தில் பாடியுள்ள திருப்பதிகங்களைக் காண்போம். அலர்மகள் (1.124) என்ற முதற் குறிப்புடையது ஒரு பதிகம். இதில், புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர் முகமது சிதைதர முனிவுசெய்தவன்மிகு - கிகழ்தரு மிழலையை கினையவ லவரே. (5) என்பது ஐந்தாவது பாடல். ஏரிசையும் (1132) என்ற முதற் குறிப்புடையது மற்றொரு பதிகம். இதில், ஆறாடு சடைமுடியன் அனலாடு மலர்க்கையன் இமயப் பாவை கூறாடு திருவுருவன் கூத்தாடுங் குணமுடையோன் குளிருங்கோயில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/235&oldid=856113" இலிருந்து மீள்விக்கப்பட்டது