பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிமிழலைச் சிறப்பு நிகழ்ச்சிகள் 195 சேறாடு செழுங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு வேறாய உருவாகிச் செவ்வழிகற் பண்பாடும் மிழலை யாமே. (7) என்பது ஏழாம் பாடல். பாடல் தோறும் முற்பகுதி கோயிலைப் பற்றியும் பிற்பகுதி அக்கோயில் அமைத் திருக்கும் இயற்கைச் சூழ்நிலை பற்றியும் அற்புதமாக எடுத்துரைக்கின்றது. எல்லாப் பாடல்களையும் இசை யேற்றிப் பாடி மகிழ்ந்து கவிதையதுபவத்துடன் பக்தியின் கொடுமுடியை எட்ட முயல வேண்டும். இப்பதிகம் *புலனைந்தும் (1:130) என்ற ஐயாற்றுப் பதிகத்தை நினைவுகூரச் செய்கின்றது. இரண்டு பதிகங்களும் முதல் திருமுறையில் அடுத்தடுத்து இருப்பதையும் கண் டு மகிழலாம். கேள்வியர் காள் (3:9) என்ற முதற் குறிப்புடையது ஒரு பதிகம். இதில், . கலையிலங்கும் மழுகட்டங் கண்டிகை குண்டலம் விலையிலங்கும் மணிமாடத்தர் வீழி மிழலையார் தலையிலங்கும் பிறைதாழ் வடம்சூலங் தமருகம் அலையிலங்கு புனலேற்ற - வர்க்கும் அடியார்க்குமே. (4) என்பது நான்காவது பாடல். சீர்மருவு (3-80) என்ற முதற் குறிப்புடைய பதிகத்தில், - செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலை தெரிந்த வரோ (டு) அந்தமில் குணத்தவர்க ளர்ச்சனைகள் செய்யஅமர் கின்ற அரனூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/236&oldid=856115" இலிருந்து மீள்விக்கப்பட்டது