பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 ஞானசம்பந்தர் கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம்பெ ருகவே வெந்தறல் விளங்கிவளர் வேதியர் விரும்புவதி விழி நகரே. (4) என்பது நான்காவது பாடல். சந்த நயம் கொழிக்கும் இப் பதிகப் பாடல்களனைத்தும் பன்முறை படித்து அநுபவிக்கத் தக்கவை. மேட்டொளி (3.85) என்ற முதற் குறிப்புடைய பதிகம் விழிமிழலை பற்றியது. பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர் உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார் தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில் மின்னென. மிளிர்வதொ ரரவினர் பதிவிழி மிழலையே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது மலர். சந்தம் கொழிக்கும் பாடல் இது. வெண்மதி (3:98) என்ற முதற் குறிப் புடையது இன்னொரு பதிகம். இதில், வேல்நிகர் கண்ணியர் மிழலை புளிர்நல பால்கிக ருருவுடை பீரே பால்கிக ருருவுடை பீரும துடனுமை தான்மிக வுறைவது தவமே. (5). என்பது ஐந்தாவது பாடல். வேலினேர்தரு (3111) என்ற முதற் குறிப்புடையது ஒரு பதிகம். இதில், வென்றி சேர்கொடி மூடுமாமதில் மிழலைமாநகர் மேவி நாள்தொறும் கின்ற ஆதிதன் னடிநினைப்பவர் துன்பமொன் றிலரே. - (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/237&oldid=856117" இலிருந்து மீள்விக்கப்பட்டது