பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிமிழலைச் சிறப்பு நிகழ்ச்சிகள் 197 என்பது நான்காவது பாடல். அடுத்த பதிகம் துன்று கொன்றை (3116) என்ற முதற் குறிப்புடையது. கட்டுகின்ற கழல்காகமே காய்ந்ததும் மதனனாகமே இட்டமாவ திசைபாடலே இசைந்தநூலி னமர்பாடலே கொட்டுவான் முழவம்வாணனே குலாய சீர் மிழலைவாணனே கட்டமாடுவது சக்தியே நானுய்தற் கிரவுசந்தியே. (3) எ ன் பது இப்பதிகத்தின் மூன்றாவது திருப்பாடல். புள்ளித்தோ' (3:119) என்ற முதற்குறிப்புடைய பதிகத்தில், கிருத்தன் ஆறங்கன் கீற்றன்.நான் மறையன் tலமார் மிடற்றன் நெற்றிக்கண் ஒருத்தன் மற்றெல்லா வுயிர்கட்கு முயிராய் புளனிலன் கேடிலி உமைகோன் திருத்தமாய் நாளும் ஆடும் கீர்ப்பொய்கை சிறியவரறிவினின் மிக்க விருத்தரை யடிவீழ்க் திடம்புகும் வீழி மிழலை யானென வினைகெடுமே. (4) என்பது நான்காவது பாடல். இங்ங்னம் தெய்வத் தொண்டும் சமயப் பணியும் கலந்த தமிழ்த் தொண்டில் காலத்தைப் போக்குகின்றார் பிள்ளையார். இறைவன் அருள் இல்லாவிடில் இங்ங்ணம் பல்வேறு வகைப் பாடல் களை-அதுவும் பதினாறு வயதுக்குள்-பாட முடியாது என்பதை நாம் உணர முடிகின்றது. கம்பியாரூரர் : சில ஆண்டுகட்குப் பின்னர்-இவர்கள் இருவரும் சிவப்பேறு அடைந்த பிறகு-நம்பியாரூரர் இத் தலத்திற்கு வருகின்றார். சீகாழிப் பதியில் உமையம்மை புடன் தோணிமீது வீற்றிருந்தருளும் பெருமானைக் காண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/238&oldid=856119" இலிருந்து மீள்விக்கப்பட்டது