பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 ஞானசம்பந்தர். விரும்பிய பிள்ளையாரைக் கழுமல நகருக்குப் போக விடாமல் தோணிபுரத் திருக்கோலத்தை விழிமிழலை விண்ணிலி விமானத்திலேயே காட்டியருளிப் பிள்ளையாரை யும் நாவின் வேந்தரையும் விழிமிழலையிலேயே தங்கப் பணித்ததும், பஞ்சம் வந்தபொழுது அவ்விரு பெரு மக்களுக்கும் நாடோறும் ஒவ்வொரு படிக்காக நல்கியருளி சிவனடியார்கட்கு உணவு கிடைக்கச் செய்ததுமான விழிமிழலை நாதனின் பேரருட் செயலைக் கேட்டு மகிழ் கின்றார். விழிமிழலை நாதனே, நல்லிசை ஞான சம்பந்தரும் நாவினுக்கரையரும் பாடிய தேனொழுகும் தமிழ்ப் பாடல்களைக் கேட்கும் விருப்பால் அவர்கட்குப் படிக்காசு தந்தருளினர். அவர்கள் பாடியருளிய தமிழ் மாலைகளை சொல்லியேத்தும் தொண்டினை மேற். கொண்டவன் அடியேன். ஆகையால் அடியேனுக்கும் அருளுதல் வேண்டும்' என்று வேண்டும் முறையில், பரந்த பாரிட மூரிடைப்பலி பற்றிப் பார்த்துணுஞ் சுற்றமாயினிர் தெரிந்த நான்மறை யோர்க்கிட மாய திருமிழலை இருந்துநீர் தமிழோ டிசைகேட்கும் இச்சையால் காசுநித்தல் கல்கினீர் அருந்தண் வீழி கொண்டிர் அடியேற்கும் அருளுதிரே, (7,88:8) என்று விழிமிழலைப் பெருமானைப் பாடிப் போற்றி யுள்ளதை நாம் நினைந்து பார்க்கின்றோம். திருவிழிமிழலை முகாமை நிறைவு செய்து கொண்டு திருத்தலப் பயணத்தை மீண்டும் தொடருகின்றார் காழிப்பிள்ளையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/239&oldid=856121" இலிருந்து மீள்விக்கப்பட்டது