பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மதுரைமாககர் அற்புதங்கள் வரலாற்றுச் சிறப்பும் இலக்கியச் சிறப்பும் மிக்க மதுரை மாநகர் கூன்.பாண்டியன் காலத்தில் சமண சமயப் பிடிப்பில் சிக்கிக் கொண்டுள்ளது. பாண்டி நாட்டிலுள்ள ஆனை மலை, பசுமலை, நாகமலை ஆகிய மலைகளைத் தம் இருப்பிடங்களாகக் கொண்டு வாழ்கின்றனர் சமண முனிவர்கள். இம்மூன்றும் பலம் பொருந்திய சமணர் கோட்டைகள். சமண சமயத் துறவிகள் தம் சமயத்தைப் பரப்புவதுடன் பிற சமயத்தவர்களை இகழ்ந்தும் வரு கின்றனர். பொதுவாக இவர்கள் அரசர்களை எப்படியோ தம் கைக்குள் போட்டுக் கொண்டு தம் கைவரிசைகளைக் காட்டுகின்றனர், பல்லவ வேந்தனைத் தம் கைக்குள் போட்டுக் கொண்டு நாவுக்கரசர் பெருமானுக்கு இழைத்த கொடுமைகள் எத்தனை? அம்மம்ம! அவற்றை நினைக்கும் போதே நம் உடல் நடுக்கம் கொள்கின்றது. கூன் பாண்டியன் (நின்றசீர்நெடுமாறன்) சமண சமயத்தவர் சூழ்ச்சியிற்பட்டுத் தனக்குரிய சைவ சமயத்தைத் துறந்து சமணனாகி விடுகின்றான். பாண்டி நாட்டுக் குடிமக்களில் பலரும் சமண சமயத்தை மேற்கொள்ளுகின்றனர். அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி தானே நடப்பார்கள்? இன்றைய கட்சி அரசியலிலும் இதைத் தானே நாம் காண் கின்றோம்? சனநாயக ஆட்சியில் பொதுமக்களில் சிலர் ஆட்சியாளர்களின் பாட்டுக்குத் தாளம் போட்டு, அல்லது அதற்குத் தக சீறியாழை வாசித்துப் பல சலுகைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/240&oldid=856124" இலிருந்து மீள்விக்கப்பட்டது