பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 ஞானசம்பந்தர் பதவிகளையும் பெறுவது நமக்குத் தெரியும் அன்றாட நிகழ்ச்சிகளன்றோ? நாட்டிலுள்ள திருக்கோயில்களில் பல பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பெறுகின்றன. ஆனால் பாண்டிமாதேவியராகிய ம ங் ைக ய ர் க் கரசியாரும் அமைச்சர் குலச்சிறை யாரும் தமக்குரிய சிவ நெறியை நெகிழவிடாது கடைப்பிடித்து ஒழுகுகின்றனர். இந்த இருவரும் ஞானசம்பந்தப் பெருமான் திருமறைக் காட்டில் எழுந்தருளியிருத்தலைக் கே ள் வி யு ற் று ப் பிள்ளையாரை வணங்கி வரும்படித் தம் பரிசனங்களை அனுப்பி வைக்கின்றனர். வந்தவர்கள் பிள்ளையாரைப் பணிந்து தம் நாட்டின் நிலைமையையும் மங்கையர்க் கரசியார் குலச்சிறையார் ஆகிய இவர்தம் அன்பு கனிந்த வணக்கத்தையும் தெரிவிக்கின்றனர். உடனிருந்த சிவனேசச் செல்வர்கள் பாண்டி நாட்டிற்கு எழுந்தருளிச் சிவநெறியைப் பரப்பவும் திருநீற்றின் சிறப்பை மக்கள் உணரும்படிச் செய்யவும் பிள்ளையாரை வேண்டுகின்றனர். பிள்ளையார் அப்பர் பெருமானை தனியே அழைத்துக் கொண்டு திருமறைக்காட்டு திருக்கோயிலினுட் சென்று இறைவனைப் பணிந்து தாம் மதுரைக்குச் செல்ல வேண்டு மென்கின்ற பெருவிருப்பத்தை நாவுக்கரசரிடம் தெரிவிக் கின்றார். இதனை யுணர்ந்த அப்பர் பெருமான் பிள்ளையாரை நோக்கி, அந்த அமணர்கள் செய்யும் வஞ்சனைக்கு ஒர் அளவே இல்லை என்பதை நான் அநுபவத்தில் கண்டவன். தவிர, ஞாயிறு முதலிய கோள் களும் தற்சமயம் நன்னிலையில் இல்லை. ஆகவே இப்பொழுது பாண்டி நாட்டிற்கு எழுந்தருள உடன்படுவது தகாது' என்று கூறித் தடுத்தருள்கின்றார். இதனைக் கேட்ட பிள்ளையார், 'நாம் போற்றுவது கயிலை நாதன் திருவடிகளாதலால் நம்பால் எத்தகைய தீங்கும் நேரிடாது' என்று வற்புறுத்து முகமாக வேயுறுதோளிபங்கன்' (2.85) 1. பெ. பு : ஞானசம்பந்த, 615, 516.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/241&oldid=856126" இலிருந்து மீள்விக்கப்பட்டது