பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் அற்புதங்கள் 201 என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் அருளிச் செய் கின்றார். வேயுறு தோளியங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழன்வெள்ளி சனிபாம் பிரண்டும் உடனே - ஆசறு நல்லநல்ல அவைநல்ல கல்ல அடியா ரவர்க்கு மிகவே. - (1} என்பது இப்பதிகத்தின் முதற் பாடல், கோளும் நாளும் தீயவேனும் இறைவனடியார்களுக்கு நன்காம்' எனக் கூறியருளுகின்றார். இத் திருப்பதிக முழுவதையும் செவிமடுத்து மகிழ்ந்த அப்பர் பெருமான், மதுரைப் பயணத்திற்கு உடன்படுகின்றார்: தாமும் அவருடன் புறப் படத் துணிகின்றார். இதனையுணர்ந்த சண்பைவேந்தர், *அப்பரே, நீர் இச்சோழ நாட்டிலேயே எழுந்தருளி இறைவனைத் தொழுதிருப்பீராக’ எனக் கை கூப்பி வணங்கித் தடுக்கின்றார்; அப்பரும் பிள்ளையாரின் விருப்பத்திற்கிணங்கித் தமது பயணத்தை நிறுத்திக் கொள் கின்றார். வேயுறு தோளிபங்கன்' என்ற இத்தேவாரப் பதிகம் கோள்களாலும் (கிரகங் களாலும்) நாள்களாலும் (நட்சத்திரங்கள்) உலகியலில் நேரும் துன்பங்கள் சிவனடியார்களைச் சார்ந்து வருத்தாத 2. நம் வாழ்க்கையில் நாளும் கோளும் நன்னிலையில் இல்லை என்பதை அறிய நேரும்போது இப்பதிதத்தைக் காலையிலும் மாலையிலும் ஓதி உளங்கரைதல் நன்று என்பது என் அதுபவம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/242&oldid=856128" இலிருந்து மீள்விக்கப்பட்டது