பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 ஞானசம்பந்தர் படி ஆளுடைய பிள்ளையாரால் அருளிச் செய்யப் பெற்ற தென்பதை, . தேனமர் பொழில்கொளாலை வினைசெந்நெல்துன் னி வளர்செம்பொ னெங்கு கிகழ கான்முக ணாதியாய் பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து . கலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலைபோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை கமதே. (11) என வரும் இறுதிப் பாடலாகிய திருக்கடைக் காப்பினால் இனிது புலனாகும். இங்ங்னம் உறுதிப் பொருளைத் தம் மேல் ஆணையிட்டு அறிவிக்கும் உரவோர் பிள்ளையார் ஆதவின் இவரை ஆணை நமதென்ற பெருமான்’ என்ற பெயரால் நம் முன்னோர் கல் வெட்டுகளிலும் குறிப்பிட்டுப் போற்றியுள்ளனர். . நாவுக்கரசர்பால் ந ன் மு ைற யி ல் விடைபெற்ற பிள்ளையார் அடியார்கள் புடைசூழச் சிவிகையிலமர்ந்து தமது மதுரைத் திருப்பயணத்தைத் தொடங்குகின்றார். இப்பயணத்தில் அகத்தியான் பள்ளி, கோடிக் குழகர் முதலிய சில சோணாட்டுத் தலங்களை வழிபட்டுக் கொண்டு தென் மேற்குத் திசையை நோக்கிச் செல்லுகின்றார்; தென் பாண்டி நன்னாட்டை அடைகின்றார். திருக்கொடுங் குன்றத்துக் குழகனைச் (பிரான்மலை) சேவித்து மதுரை நகரின் மருங்கே வந்தணைகின்றார். காழிப் பிள்ளையாரின் வருகையை யறிந்து மகிழ்வுற்ற மங்கையர்க்கரசியார், பிள்ளையாரை எதிர்கொண்டழைக்கும்படி அமைச்சர் குலச்சிறையாரை அனுப்பி வைக்கின்றார் அமைச்சரும் மதுரை நகரின் எல்லைப் புறத்தே சென்று ஆளுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/243&oldid=856130" இலிருந்து மீள்விக்கப்பட்டது