பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் அற்புதங்கள் 203. பிள்ளையாரைக் கண்டு நிலமிசைப் பணிந்து வீழ்கின்றார். பிள்ளையாரும் சிவிகையினின்றும் இறங்கி அவரைத் தமது கைகளால் பற்றி எடுத்து, 'செம்பியர் குலமகள் மங்கையர்க் கரசியாருக்கும், தூய நெஞ்சமுடைய அமைச்சராகிய உமக்கும் சிவபெருமானது திருவருள் பெருகட்டும்' என வாழ்த்தி நலம்பல வினவுகின்றார். இதனைக் கேட்ட குலச்சிறையார் :சென்ற காலத்தில் நன்றாக இருந்தோம்; எதிர்காலத்தில் பெருஞ்சிறப்பு எய்த இருக்கின்றோம்: தேவரீர் தென் தமிழ்நாட்டிற்கு எழுந்தருளியதால் பெரும் பேறு பெற்றோம். இதனால் எக்காலத்தும் திருவருள் பெற்றவர்களாகின்றோம். நன்மையற்ற நெறியில் அழுந்திக் கிடக்கும் தென்னாடும் நல்ல தமிழ் வேந்தனாகிய எங்கள் பாண்டியனும் வெண்ணிற்றினால் அடையும் தன்மை களனைத்தையும் பெறப் போகின்றோம். அரச மாதேவி தாங்கள் இவண் எழுந்தருளியதை அறிந்து அடியேனைத் தங்கள் திருமுன் அனுப்பி வைத்தார்கள்” என அடக்கத் துடன் கூறுகின்றார். பிள்ளையார் மதுரையை நெருங்கியவுடன் திருவால வாய் இருக்குமிடத்தை உசாவுகின்றார். அவண் நின்ற 3. ஆளுடைய பிள்ளையார் - ஞானசம்பந்தர்: ஆளுடைய அடிகள் - அப்பர் பெருமான், ஆளுடைய' நம்பி - நம்பியாரூரர் (சுந்தரர்). 4. ஆலவாய் (மதுரை): மதுரை இருப்பூர்தி நிலயத்தி லிருந்து 1 கல் தொலைவு. பாண்டி நாட்டின் தலைநகர். மூன்று தமிழ்ச் சங்கங்கள் திகழ்ந்த தலம். சொக்கலிங்கப் பெருமான் 64 திருவிளையாடல்கள் புரிந்த இடம். அங்கயற் கண்ணியார் அவதாரம் செய்து பாண்டியன் திருமகளாக வளர்க்கப்பெற்றுச் சோமசுந்தரராக வந்த சிவபெருமா னைத் திருமணம் செய்துகொண்டு அரசு புரிந்த பழம்பதி. மூர்த்தி நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் முதலியோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/244&oldid=856132" இலிருந்து மீள்விக்கப்பட்டது