பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ஞானசம்பந்தர் அடியார்கள் கோபுரத்தைச் சுட்டிக் காட்டி அதுவே திருவாலவாய் என்று கூறுகின்றனர். கோபுரத்தைக் கண்ணுற்ற பிள்ளையார் நிறைந்த பேரன்பினால் நில மிசைப் பணிந்து அன்பராயினார் பரவும் ஆலவாயாவதும் இதுவே என வியந்து மங்கையர்க்கரசி' (3-120) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலையால் நிலமிசை வீழ்ந்து ஆலவாயைப் போற்றுகின்றார். மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாள்தொறும் பரவப் பொங்கழல் உருவன் யூத நாயகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே. (t ) என்பது இம் மாலையின் முதல் மலர். இப் பதிகம் மங்கை யர்க்கரசியார், குலச்சிறையார் ஆகிய இருவரது திருத் தொண்டினையும் திருவாலவாய்ப் பெருமான் ஏற்றருளிய திறத்தைச் செப்புகின்றது. பின்பு குலச்சிறையாருடன் திருவாலவாய்த் திருக்கோயிலை வலங்கொண்டு இறைவன் திருமுன் நின்று நீலமாமிடற்றாலவாயிலான் (1.94) என்ற திரு இருக்குக் குறள் செந்தமிழ் மாலை பாடிச் சேவிக் கின்றார். இதில், லே மாமிடற் றால வாயினான் பால தாயினார் ஞால மாள்வரே. . (1) . வரலாற்றுத் தொடர்புடைய வளநகர். இத்தகைய பல நிகழ்ச்சிகள் நடைபெற்றத் தெய்வத் திருத்தலம். மூவரும் பாடிய சிறப்புடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/245&oldid=856136" இலிருந்து மீள்விக்கப்பட்டது