பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் அற்புதங்கள் 205. அண்ண லாலவாய் கண்ணி னான்றனை எண்ணி யேதொழத் திண்ணம் இன்பமே. (6}. என்பது முதல், ஆறாவது வாடா நறு மலர்கள். பிள்ளையார் ஆலவாயானைத் தொழுதமுறையை, அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவின்றி வணங்கிப் பொங்கு காதலின் மெய்ம்மயிர்ப் புளகமும் பொழியும் செங்கண் கீர்தரும் அருவியும் - திகழ்திரு மேனி எங்கு மாகிகின் றேத்தினார் புகலியர் இறைவர்." என்ற பாடலால் அழகுறக் காட்டுவர் சேக்கிழாரடிகள். இந்நிலையில் ஆலவாய் இறைவனைச் சேவிப்பதற்கு மங்கையர்க்கரசியார் திருக்கோயிலுக்கு வருகின்றார். இறைவனைச் சேவித்துக் கோயிலின் முன்றிலில் அனைத்த, பிள்ளையாரைக் கண்டு அவருடைய திருவடித் தாமரை களில் வீழ்ந்து பணிகின்றார். பிள்ளையார் தேவியை எழுதரிய மலர்க்கையால் எடுக்கின்றார். அரச மாதேவியும் கண்களில் நீர் மல்கப் பவளவாய் குளறி யானும் என் பதியும் செய்த தவம் என்கொல்!” என்கின்றார். "அம்மையிர், புறச்சமயச் சூழ்நிலையில் இருந்தபோதிலும் அரனடி மறவாது சிவத்தொண்டு புரியும் உம்மைக் காணும் பொருட்டே யாம் இவண் போந்தனம்’ என்று கூறி பாண்டிமாதேவிக்கு விடை கொடுக்கின்றார் சிவக்கன்று. திருக்கோயிலில் தங்கித் திருத்தொண்டு புரியும் அடியார் களும் பிள்ளையாரை அணுகி, புறச்சமய இருள் கெடத் தாங்கள் மல்கு செல்வ மதுரையில் எழுந்தருள்வதற்கு 5. பெ. பு : ஞானசம்பந். 666.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/246&oldid=856138" இலிருந்து மீள்விக்கப்பட்டது