பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் அற்புதங்கள் 207. றிதுவேயாகில் அதனையே விரைந்து செய்யப் போமின்' எனக் கூறி அவர்கட்கு விடையும் தருகின்றான். மிக்க கவலையுடன் பள்ளியறைக்குச் செல்லுகின்றான் பாண்டியன். அப்போது அரசமாதேவி அங்கு வருகின்றாள். சம்பந்தர் சமணர்களுடன் வாதம் செய்யும் பொருட்டு மதுரை வந்த செய்திபற்றி இருவரும் உரையாடுகின்றனர். ::இதுதான் எனக்குக் கவலை தருகின்றது என்கின்றான் அரசன். அரசமாதேவியும் வென்றவர் பக்கல் தாங்கள் சேர்வது உறுதியாகும். இதற்குக் கவலைப்படவேண்டிய தில்லையே என்கின்றாள். பின்னர் அரசமாதேவியார் மகிழ்ச்சியுற்று அறையைவிட்டு வெளியே போதர, குலச் சிறையார் அங்கு வந்தெய்துகின்றார். அரசமாதேவியார் இதனைக் குலச்சிறையாருக்கு விவரமாக உரைக்கின்றார். இந்நிலை இவ்வாறாக, அரசனது ஆதரவு பெற்றுச் சென்ற சமணர்கள் தங்கள் மந்திரவன்மையால் சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ மூட்ட முனைகின்றனர். ஆதிமந்திரமாகிய திரு ஐந்தெழுத்தினை ஒதும் சிவனடி யார்கள் த ங் கி ய திருமடத்தில் சமணர்களுடைய மந்திரங்கள் யாவும் பயன்படா தொழிகின்றன. வேந்தன் ஈதறியின் தமது மதிப்பும் ஒழியும், தமது செல்வாக்கும் தேய்ந்தொழியும் என்ற கவலையால் சமணர்கள் இரவில் மறைந்து சென்று பிள்ளையார் தங்கியிருந்த திருமடத்தில் தாமே தீ மூட்டுகின்றனர். மடத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிவதைக் கண்டு அஞ்சிய சிவனடியார்கள் விரைந்து தீயினை அணைத்து பிள்ளையார்முன் சென்று செய்தி கூறி முறையிடுகின்றனர். இதனை அறிந்த பிள்ளையார் *மாதவர் துயிலும் மடத்தில் பாவிகள் இங்கனம் பழுது செய்தல் முறையாகுமோ? என்பொருட்டு இத் தீங்கினை அவர்கள் செய்யிலும், இஃது இறைவனடியார்களைப் பற்றவல்லதோ? இஃது அரசன் முறைசெய்து காப்பாற்றா மையால் நேர்ந்ததாகும்' என்று சிந்திக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/248&oldid=856142" இலிருந்து மீள்விக்கப்பட்டது