பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

絮冷 ஞானசம்பந்தர் மடையர் இட்ட தீ மன்னனின் வெப்பு நோயாதல்: பிள்ளையாரின் சிந்தனை முதலில் அச்சத்தைத் தோற்று விக்கின்றது; பின்னர் சிறிது சினத்தையும் விளை விக்கின்றது. சிவனடியார்கள் வாழும் மடத்து அமணர்கள் இட்ட தித் தழல் பையவே சென்று பாண்டியனைச் சார்வதாகுக என்று ஏவும் கருத்துடன் செய்யனே திருவாலவாய் (3.51) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடியருளுகின்றார். செய்ய ைேதிரு ஆலவாய் மேவிய ஐய னேஅஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே. (1) என்பது முதற் பாடல். பாண்டிய மாதேவியின் மங்கல நாணைப் பாதுகாத்தற். பொருட்டும் அமைச்சர் குலச்சிறையார் மன்னன்பால். வைத்த அன்பினைக் கருதியும், பாண்டியன்பால் அபராதம் உறுதலை எண்ணியும், அவன் திரும்பவும் சிவநெறியிற். சேர்தற்குரிய நற்பேற்றினை நினைந்தும் பிள்ளையார் தீப்பிணியைப் பையவே செங்க எனப் பணித்தருளின தாகக் கூறுவர் சேக்கிழார் பெருமான். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழி'யாதலால் அவர்கள் கருதிய வண்ணம் நன்மையும் தீமையும் தரவல்லதாதலால், மறை முனிவராகிய பிள்ளையார் பையவே சென்று பாண்டியற்காகவே' என்று திருப் பதிகத்தில் பணித்தவாறு விரிந்த வெந்த ழல் வெம்மை போய்த் தென்னவனை மெல்லத் திண்டி வெப்பு நோயாக மாறுகின்றது. - பல்வேறு சிகிச்சைகள்: பொழுது புலர்ந்ததும் பிள்ளையார் திருமடத்தில் சமணர் இரவில் தீயிட்ட செய்தி நகரெங்கும் பரவுகின்றது. இதனைச் செவிமடுத்த அரசமா 6. பெ.பு. ஞானசம்பந். 705.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/249&oldid=856145" இலிருந்து மீள்விக்கப்பட்டது