பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைமாதகர் அற்புதங்கள் 209 தேவியாரும் குலச் சிறையாகும் மனநடுக்க முறுகின்றனர்" :இக் கொடியோர் வாழும் நாட்டில் பிள்ளையாரைத் தருவித்த நாம் மாய்வதே நன்று' எனத் துணிகின்றனர், பின்னர் திருமடத்திலே தீங்கொன்றும் நேரவில்லை என்ற செய்தியறிந்து ஒருவாறு ஆறுதல் பெறுகின்றனர். இந்நிலையில் அரசனை வெப்புநோய் பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர்கள் மூலம் அறிந்து உளநடுக்க முற்று மன்னனை அடைகின்றனர். மருத்துவர்கள் தாம் கற்ற பல கலைகளால் நோயைத் தணிக்க முயன்றும் அவர்கள் முயற்சி பயன்படவில்லை. தங்கள் புரவலனான மன்னன் சுரநோயால் வருந்துவதை அறிந்த அமணர்கள் அரண்மனையை அடைந்து அவனது நோய்க்குக் காரணம் தமது தீச்செயலே என்பதை உணராமல் நோய் தணிக்கும் பல்வேறு மந்திரங்களைச் சொல்லி மயிற்பீலியால் தடவு கின்றனர். தம் கையிலுள்ள குண்டிகை நீரைத் தெளிக் கின்றனர். இவற்றால் மன்னனது நோய் முன்னையினும் பன்மடங்கு அதிகரிக்கின்றது. இதனைக் கண்டு வருத்த முற்ற மன்னன் நீங்கள் ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது ஏகுமின்’ என வெகுண்டு கூறி உணர்விழந்து சோர்கின்றான். மன்னனின் சோர்வு மங்கையர்க்கரசியார்க்கும் மந்திரி யார்க்கும் அச்சத்தை விளைவிக்கின்றது. அமைச்சரை நோக்கி அ ர சி யார், நேற்றிரவு பிள்ளையாருக்கு அமணர்கள் இழைத்த தீமைதான் இங்ஙனம் விளைந் ததோ? என வருந்திக் கூறுகின்றார். குலச் சிறையார் கொற்றவனைப் பணிந்து பிள்ளையாருக்கு அருகர்கள் செய்த தீமையே இவ்வாறு வந்து மூண்டது. பிள்ளையாரை அழைத்தால் இந்நோய் தீரும்' எனச் செப்புகின்றார். ஞானசம்பந்தர் என்னும் திருநாமம் தன் செவியகத்துப் புக்க அளவிலே அயர்வு நீங்கி உணர்வு பெறுகின்றான் பாண்டியன். அமணர்கள் இழைத்த தீச்செயல்களே தனது நோய்க்கு ஏதுவாயின என எண்ணுகின்றான். 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/250&oldid=856149" இலிருந்து மீள்விக்கப்பட்டது