பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 ஞானசம்பந்தர் இறையருள் பாண்டியன் பக்கம் பாயத் தொடங்குகின்றது. எஞானக் கன்றின் அருளால் இந்நோய் அகலுமேல் மகிழ்வேன்; யானுற்ற பிணியைத் தீர்த்து வென்றவர் பக்கமே சார்தற்குரியேன். அவ்வாறாயின் அவரை அழைப் பீராக’ என்று பணிக்கின்றான் பாண்டியன். அரசியாரும் அமைச்சரும் மன்னனுக்குத் திருவருட்பேறு உண்டாதலை யுணர்ந்து மகிழ்ச்சி அடைகின்றனர். அரசியார் அணிமணிச் சிவிகை ஏறி அமைச்சர் முன்னே செல்ல பிள்ளையார் திருமடத்தை அடைகின்றனர். செவ்வி யறிந்து காழிவேந்தரைக் காண்கின்றனர். இதனைச் சேக்கிழார் பெருமான், - ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை, வானத்தின் மிசையன்றி மண்ணின்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்." என்று காட்டுவார். நாமும் அரசியாருடனும் அமைச்ச ருடனும் பிள்ளையாரைக் காண்பது போன்ற உணர்வை அடைகின்றோம். பிள்ளையாரின் திருவடித் தாமரை களைப் பணிந்து சமணர்கள் செய்த தீத்தொழில் கேட்டு மிகவும் அஞ்சி வருந்துகின்றோம். அவர்கள் செய்த தீங்கு வெப்பு நோயாகி அரசனைப் பற்றி நின்று மிகவும் வருத்து கின்றது. அமணர்களின் மந்திர தந்திரங்களால் அதனைப் போக்க முடியவில்லை. அன்றியும் அவற்றால் மேலும் பெருகுகின்றது. ஆகவே, பெருமானே, தாங்கள் அரசன் திருமுன் அவர்களை வென்றருளினால் வேந்த உயிரும் எங்கள் உயிரும் உய்யும்' என்று விண்ணப்பம் செய் 7. பெ. பு: ஞானசம்பந்த, 7.28.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/251&oldid=856151" இலிருந்து மீள்விக்கப்பட்டது