பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் அற்புதங்கள் #14 இன்றனர். இதனைக் கேட்ட பிள்ளையார், நீவிர் சிறிதும் அஞ்சுதல் வேண்டா; யாவரும் கண்டு மகிழும் வண்ணம் அமணர்களை இன்றே வாதில் வென்று தென்னவர் கோமா னுக்குத் திருநீறு அணிவிப்போம்” என்று அவர்கட்கு ஆறுதல் கூறுகின்றார். ஆவதும் அழிவதும் அவன் செயல்' என்னும் உறுதி யுடன் திருமடத்திலிருந்து நேரே திரு ஆலவாயை அடை இன்றார். கண்ணாற் காணவும் தகாத கொடியோரை நேரில் கண்டு வாது செய்தல் ஆலவாய்ப் பெருமானாகிய நினது திருவுள்ளத்திற்கு இயைந்த செயலாகுமா?’ என ஆலவாய் அமர்ந்துறையும் இறைவனது திருக்குறிப்பை அறிந்து கொள்ளும் விருப்புடன் காட்டுமாவுரி (3.47) என்ற திருப்பதிகம் பாடி இறைவனது திருவுள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளுகின்றார். இதில், - காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் நாட்ட மூன்றுடை யாயுரை செய்வனான் வேட்டு வேள்வி செய்யா அமண்கையரை ஒட்டி வாது செயத்திரு வுள்ளமே (1) ஒதி யோத்தறி யாஅம ணாதரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே ஆதி யேதிரு ஆலவாய் அண்ணலே நீதி யாக கினைந்தருள் செய்திடே. (4) என்பது முதல், நான்காவது பாடல்கள். இங்ங்னம் எம்பெரு மானின் திருவுள்ளக் குறிப்பை உணர்ந்து கொண்டு, ஆலவாய் இறைவனின் உடன்பாடு பெற்று அப்பெருமான் பால் விடைபெறுங் கருத்துடன் வேத வேள்வியை (3.108) என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றுகின்றார். இதில், வேதவேள்வியை கிந்தனை செய்துழல் ஆத மில்லி யமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பர்தி மாதுட னாய் பரமனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/252&oldid=856153" இலிருந்து மீள்விக்கப்பட்டது