பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 - - ஞானசம்பந்தர் ஞால கின்புக ழேமிக வேண்டுக் தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே. (1) என்பது முதற் பாடல். வாடல்மேனி யமணரை வாட்டிடக் கூடல்வாய்க் கோனிடம் விடை கொண்டு” (11) அடியார் கள் புடைசூழச் சிவிகையிலேறியமர்ந்து பாண்டியனது அரண்மனையை நோக்கிப் புறப்படுகின்றார் காழிநாடு டைய பிள்ளை. இவருக்குப் பின்னால் தென்னவன் தேவி யாரும் திருமணிச் சிவிகையேறி வருகின்றார்; அமைச்சர் பிள்ளையாருக்கு முன்னால் பெருந்தொண்டர் குழாத் துடன் செல்லுகின்றார். சண்பை வேந்தரின் வருகையைத் தென்னவர் கோமானுக்குத் தெரிவிக்கின்றார் குலச்சிறையார். இதனை யறிந்த வேந்தன் தனது நோய்த்துன்பம் சிறிது தணியப் பெற்றவனாய்ப் பிள்ளையார் அமர்வதற்கு பொற் ஹவிசு ஒன்றையிடும்படி அவரை அழைக்க அமைச்சரை ஏவுகின்றான். அவனது செயலைக் கண்டு சமணர்கள் பொறாமை கொள்ளுகின்றனர். அவர்கள் அரசனை நோக்கி, நமது சமயத்தை நிலைநிறுத்தும் முறை இதுவோ? நினது அறநெறியை நீயே காத்தல் வேண்டும். பிள்ளையாரை நோய் தீர்க்க இங்கு அழைத்தாலும் அவரும் நாங்களும் தீர்க்கும்படி சொல்லவேண்டும். ஒருக்கால் அவரால் நோய் தீர்க்கப்பெற்றாலும் எங்க ளாலும் தீர்க்கப் பெற்றதாகச் சொல்லுக' என வேண்டு. கின்றனர். - - சமணர்களின் சூழ்ச்சியை உணர்ந்த அரசன் நீங்கள் இருதிறத்திரும் உங்கள் தெய்வச் சார்பினாலே தீருங்கள். யான் நடுவுநிலை திறம்பி வஞ்சகம் பேசேன்' எனத் தெளி வாகக் கூறுகின்றான். அரசனது உரை அமணர்களின் அடிவயிற்றைக் கலக்குகின்றது. இந்நிலையில் காழிப் பிள்ளையார் அங்கு எழுந்தருளுகின்றார். வேந்தன் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/253&oldid=856155" இலிருந்து மீள்விக்கப்பட்டது