பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைமாநகர் அற்புதங்கள் 213 தலைப்பக்கத்தில் இடப்பெற்றிருந்த மணியாசனத்தைப் பிள்ளையாருக்குக் காட்ட அவரும் அதன்கண் அமர்ந்தருளு கின்றார். இதனைக் கண்ணுற்ற சமணர்கள் மேலும் அச்சமுறுகின்றனர். சம்பந்தரைக் காணப்பெற்ற நற் பேற்றினால் நோய்வருத்தம் சிறிது தணியப்பெற்ற பாண்டியன் பிள்ளையாரை நோக்கி 'துமது ஊர் யாது' என வினவுகின்றான். அதற்குப் பிள்ளையார், பிரமனுர் வேணுபுரம் புகலிவெங்குருப் பெருநீர்த் தோணி புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ்சண்பை அரன்மன்னு தண்காழி கொச்சைவயம் உள்ளிட்டங் காதியாய பரமனுர் பன்னிரண்டாய் கின்றதிருக் கழுமலம்காம் பரவுமூரே, (1) எனவரும் திருப்பதிகம் (2.70) பாடி பிரமபுரம் முதலிய பன்னிரண்டு திருப்பெயர்களையுடைய திருக்கழுமலமே நாம் கருதும் ஊர் என மறுமொழி கூறுகின்றார். இக் காட்டிய பாடலே இப்பதிகத்தின் முதற் பாடல். இதில் 1. பிரமனுார், 2. வேணுபுரம், 3. புகலி, 4. வெங்குரு, 5. தோணிபுரம், 6. பூந்தராய், 7. சிரபுரம், 8. புறவம், 9. சண்பை, 10. காழி, 11. கொச்சைவயம், 12. கழு மலம் என இம்முறையே பன்னிரண்டு திருப்பெயர்களும் இவ்வெண்ணு முறைப்படியே இத்திருப்பதிகத்தின் ஒன்று முதல் பன்னிரண்டு வரையுள்ள பாடல்களின் முதற்றிருப் பெயர்களாக அமைந்துள்ளன. இங்ங்ணம் முதற்பாடலில் குறித்த பன்னிரண்டு பெயர்களும் நிரலே அப்பதிகத்தின் 1 முதல் 12 வரையுள்ள பாடல்களின் முதற்பெயர்களாக நின்று ஒரு வட்டமாக அமையும்படி அப்பெயர்களை மாற்றினமையால் இது சக்கர மாற்று' என்ற திருப்பெய ரைப் பெறுகின்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/254&oldid=856157" இலிருந்து மீள்விக்கப்பட்டது