பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}4 ஞானசம்பந்தர் அருகிலிருந்த சமணர்கள் தம் உள்ளத்திற் கிளர்ந்தெழு கின்ற அச்சத்தை மறைத்துக் கொண்டு கோபத் தீ கண் களில் துள்ளி எழப் பலபல பேசுகின்றனர். காலை எழும் கதிரவனைப் புடைசூழும் கருமுகில்போல் பிள்ளையாரைச் சூழ்ந்து கொண்டு தம் கோலும் நூலும் காட்டிப் பிள்ளையாரை வாதுக்கு அழைக்கின்றனர். பிள்ளையார் அவர்களை நோக்கி உங்கள் நூல் துணியினை உள்ளவாறு பேசுங்கள்' என்கின்றார். அருகர் கூட்டமாக எழுந்து பிள்ளையாரைச் சூழ்ந்து கொண்டு பேசத் தொடங்கு கின்றனர். இதுகண்டு அச்சமுற்ற அரசமாதேவியார் மன்னனை நோக்கி, பின்ளையாரோ சிறு பாலர்; அமணர் களோ பலர், தினது வெப்புநோயை இவர்கள் தீர்த்த பிற கு சமணர்கள் வல்லமையுடையராயின் வாது செய்யலாம் எனச் செப்புகின்றார். பாண்டியன் மங்கையர்க்கரசியாரை நோக்கி நீ வருந்தற்க' எனக் கூறிச் சமணர்களை நோக்கி நீங்கள் செய்தற்குரிய வாதம் என்ன இருக்கின்றது? நீங்களும் சிவநேசச் செல்வராகிய இவரும் என்னுடைய சுரநோயைத் தீர்த்து நீங்கள் தெளிந்துணர்ந்த தெய்வத் தன்மையை என்பால். தெரிவிப்பீராக’ என்று கூறுகின்றான். ஞானவாரமுதம் உண்ட பிள்ளையார் தன் பால் தாயினும் சாலப்பரிவுடைய நற்றவத் திருவாகிய அரசமா தேவியாரை நோக்கித் தேவியே, என்னைப் பால்மணம் மாறாத பாலன் எனக்கருதி நீ அஞ்ச வேண்டா; ஆலவாய் இறைவன் நிலைபெற்ற துணையாய் என் நெஞ்சில் எழுந் தருளியுள்ளான். அவன் இருக்கும்பொழுது நான் இவர்கட்கு எளியனல்லேன்' என்னும் கருத்தமைய மானினேர் விழி: (3-39) என்ற திருப்பதிகத்தைப் பாடி அவரது அச்சத்தைப் போக்கியருளுகின்றார். மானி னேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெருங் தேவிகேள் பானல் வாஆொரு பாலன் ஈங்கிவன் என்று பரிவெய்திடேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/255&oldid=856159" இலிருந்து மீள்விக்கப்பட்டது