பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 ஞானசம்பந்தர் நடுக்கமெய்தித் தூரத்தே அகல்கின்றனர். அரசன் அவர் களை நோக்கி நீங்கள் தோற்றீர்கள்; என்னை விட்டு அகன்று போமின்” எனக் கட்டளையிட்டு பிள்ளையாரை நோக்கி இடப்பாகத்து வெம்மையையும் தாங்களே போக்க வேண்டும்" என வேண்டுகின்றனன். பிள்ளையார் இடப்பாகத்தில் நீறு கொண்டு பூச, இந்நிலையில் இருபக்கத்து வெம்மையும் நீங்கிச் சுரநோய் முற்றிலும் தீர்ந் தொழிகின்றது; அரசனும் உய்கின்றான். அரசமாதேவி யும், அமைச்சரும் பிள்ளையார் திருவடிகளை வணங்கிப் போற்றுகின்றனர். வெப்புநோய் நீங்கப்பெற்ற வேந்தனும் எழுந்து சென்னிமேற் கைகூப்பி ஞானக்கன்றின் திருவடிகளை வணங்கி 'யான் உய்ந்தேன்' என்கின்றான் சமயப் போட்டி நிகழ்ந்த காலத்தில் சமய வாதிகள் தம் கொள்கையை மக்களிடையே பரப்பி அவர்களைத் தம் வசப்படுத்துவதற்கு மந்திரம், தந்திரம், வாதம் என்ற மூன்று வகையான உபாயங்களைக் கையாண்டனர் என்பது வரலாற்றால் அறியும் உண்மை. வடநாட்டில் நடைபெற்ற 8. 1978 செப்டம்பரில் மஞ்சட் காமாலை நோயால் தாக்கப்பெற்றேன். சுமார் நாற்பது நாட்கள் துன்பப் பட்டேன். பல்வேறு நாட்டுமுறை சிகிச்சைகளை மேற் கொண்டேன்; பயன் இல்லை. ஒரு நாள் நாடி இறங்கி விட்டது; குடலிறக்கமும் ஏற்பட்டது. பி ைழ க் க மாட்டேன் என்ற நிலை ஏற்பட்டது. ஒரே வழி என் மனத்தில் தோன்றியது. இறையருளால் சம்பந்தப் பெருமானின் மந்திரமாவது நீறு என்ற வெண்ணிற்றுப் பதிகத்தைப் பத்து முறை படித்து நெற்றியிலும் மார்பிலும் கைகளிலும் வெண்ணிறு அணிந்து கொண்டேன். நோய் குறைந்தது; மூன்றே நாட்களில் முழுக்குணம் எய்தினேன். வெண்ணிற்றின் மகிமையை அநுபவத்தில் உணர்ந்தேன்; இஃது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகி விட்டது. ... . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/257&oldid=856162" இலிருந்து மீள்விக்கப்பட்டது