பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் அற்புதங்கள் 217 இதே உக்தி முறைகள் தென்னாட்டிலும் நிகழ்ந்திருக் கின்றன. கி. பி. ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில்தான் இந்தப் பிரசார உக்திகள் முழுவேகத்துடன் முடுக்கப் பெற்றன என்பதற்கு நாவுக்கரசர், சம்பந்தர் இவர்களது வாழ்க்கையதுபவங்கள் நமக்குச் சான்றுகளாக அமை கின்றன. பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்க்கும் ஆற்றலற்ற அமணர்கள் பிள்ளையாரைத் தருக்கவாதத்தால் வெல்லுதல் இயலாதெனத் தெளிந்து நீரிலும் நெருப்பிலும் வெல்வதாக எண்ணுகின்றனர். அவர்களை நோக்கி காழி வேந்தர் *இனி உங்கள் வாய்மையைப் பேசுமின்' என்கின்றார். இதனைக் கேட்ட அருகர்கள் தருக்கம் பேசி வெல்ல வேண்டுவதில்லை. காட்சியளவினாலேயே நிறுவுதல் இயலும். இருதிறத்தாரும் தாம் கண்ட பேருண்மையினை ஏட்டில் எழுதி அதனை நெருப்பிலிட்டால் வேவுறாத ஏட்டினையுடைய சமயமே மெய்ச் சமயம்' என்கின்றனர். காழிப்பிள்ளையார் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள் கின்றார். அனல்வாதம் : ப்ாண்டியன் தன் பேரவை முன்னர் தீக்குண்டம் அமைக்க ஏற்பாடு செய்கின்றான்; தீ மூட்டப் பெறுகின்றது. பிள்ளையார் சிவபெருமானே மெய்ப் பொருள் எனத் தெளிந்து தாம் பாடியருளிய திருப்பதிகங்கள் எழுதப்பெற்ற அடங்கன் முறையினைக் கொணரச் செய் கின்றார். சிவபெருமானே முதற் பொருள் எனத் தொழுது அத்திருமுறையினைச் சென்னிமேல் வைத்துப் போற்றித் திருக்காப்பு நாணை அவிழ்த்து அத்திருமுறை ஏட்டினை விரித்துப் பார்த்த அளவில், போகமார்த்த பூண் முலையாள் (1.49) என்ற நள்ளாற்றுப் பதிகம் நேர்படு கின்றது. அது கண்ட பிள்ளையார் அத் திருப்பதிகத் தினையே விரும்பி நள்ளாற்றுப் பெருமானைத் தொழுது அப்பதிக ஏட்டினைக் கழற்றிக் கையிலே எடுத்துக் கொள் கின்றார். 'என்னை ஆளுடைய இறைவனது திருநாமமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/258&oldid=856163" இலிருந்து மீள்விக்கப்பட்டது