பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ஞானசம்பந்தர் என்றும் நிலைபெற்ற மெய்ப்பொருளாகும் என உலக. மாந்தர்க்கு அறிவுறுத்தும் நிலையில் இத்திருப்பதிக ஏடு தீயில் வெந்தழியாது நிலை பெறுக' என்று சொல்லித் தளரிள வளரொளி (3.87) என்ற இன்னொரு நள்ளாற்றுத். திருப்பதிகத்தைப் பாடி முன்னைய ஏட்டை யாவரும் காணத் தீயில் இட்டருளுகின்றார். - சம்பந்தப் பெருமானால் நெருப்பில் இடப்பெற்ற ஏட்டில் எழுதப்பெற்ற திருப்பதிகம், பரஞானம் அபர ஞானம் என்னும் இரு தனங்களையுடைய உமாதேவியாரை ஒரு பாகத்திற் கொண்டு திகழும் அட்டமூர்த்தியாகிய சிவ பெருமானைப் பொருளாகக் கொண்டமையால், கொழுந்து விட்டெரியும் அத்தீயினுள்ளே எரிந்து சாம்பலாகாது. "பச்சையாய் விளங்குகிறது (ஆகவே, இது பச்சைப் பதிகம் எனப் பெயர் பெறுகின்றது). தங்கள் நூற்பொருள் எழுதப் பெற்று சமணர்கள் இட்ட ஏடு "பஞ்சு தீயிடைப் பட்டது போல்’ எரிந்து சாம்பலாகின்றது. அரசன் சமணர்களை நோக்கி இப்பொழுதும் நீவிர் தோற்றிலிரோ?" என்று சொல்லி நகைக்கின்றான். இந்நிலையில் அவர்கள் வேந்தனை நோக்கி, அரசே, ஒருவாதினை மும்முறை செய்து உண்மை காணலே முறையாகும். இருதிறந்தாரும் தத்தம் சமய உண்மைகளை எழுதிய ஏட்டினை ஆற்று வெள்ளத்தில் இட்டால் எவருடைய ஏடு எதிரேறிச் செல் கின்றதோ அவ்வேட்டிற்குரியவரே வென்றவராவர்" எனக் கூறுகின்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் அவர்களை நோக்கி, இனிமேல் செய்யக் கருதும் வாதில் தோற்ப வர்கள் தம் தோல்விக்கு அடையாளமாகப் பெறும் இழப்பு இன்னது என்பதை இப்பொழுதே உறுதி செய்து கொள்ள வேண்டும்' என்கின்றார். இதனைக் கேட்ட சமணர்கள் செற்றமுற்று "யாம் இவ்வாதில் தோற்போமாயின் எங்களை இவ்வரசனே கழுவேற்றும் கடமையுடையவன்' எனக் கூறுகின்றனர். சமணர்களின் சூளுரையைக் கேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/259&oldid=856165" இலிருந்து மீள்விக்கப்பட்டது