பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை மாநகர் அற்புதங்கள் 21.9% பாண்டியன் அவர்களை நோக்கி நீவிர் நும் செய்கையை மறந்து செற்றத்தால் வாய் சோர்ந்து பேசி விட்டீர்கள். இனி வையையாற்றில் ஏட்டினை இடப்போதல் முறை" என்று கூறுகின்றான். புனல்வாதம் , அரசன் கட்டளையிட்ட வண்ணம் இரு திறத்தாரும் வ்ைகைக் கரைக்கு வருகின்றனர். முன்னர்த் தோல்வியுற்றவர்கள் பின்னரும் தோல்வியுறார் என்பது சமணர்களின் நம்பிக்கை. பாண்டியன் முன்னிலையில் அஸ்தி காஸ்தி’ என்ற வடமொழித் தொடரை ஏட்டில் எழுதி அதனை வைகை நதியில் இடுகின்றனர். அந்த ஏடு வெள்ளத்தை எதிர்த்துச் செல்ல மாட்டாது வெள்ளத்தோடு கடலை நோக்கிச் செல்லுகின்றது. ஏட்டினை நோக்கிக் கரை வழியே ஒடிய சமணர்கள் அதனைத் தொடர்ந்து ஒடமாட்டாது திரும்பி வருகின்றனர். வந்தவர்கள் சம்பந்தரை நோக்கி, நீவிரும் துமது சமய உண்மையை ஏட்டில் வரைந்து ஆற்று வெள்ளத்தில் இட்டால் உண்மை காண்போம்' என்கின்றனர். இந்நிலையில் பாண்டியன் பிள்ளையாரை நோக்குகின்றான். ஞானக் கன்றும் சைவ சமய உண்மைகளைத் தொகுத்து வாழ்க அந்தணர் (3 54) என்ற பொதுப் பதிகமாகப் பாடத் தொடங்குகின்றார். இந்தக் காட்சியைக் காண மதுரை மாநகரமே வைகையின் இரு கரையிலும் திரண்டெழுகின்றது. சீதை திருமணமாகி நகருலாச் சென்றபோது ஊர் மக்கள் திரண்டு பலவாறு புகழ்ப் பேச்சுகள் பேசினதுபோல் இப்போது நகர மாந்தர்கள் சம்பந்தர் செயலில் பெருநம்பிக்கை கொண்டு பலவாறாகப் பேசிக் கொள்வதைச் சேக்கிழார் பெருமான் அற்புதமாகக் காட்டுவதை அவர் திருப்பாடல்களைப் படித்துதான் அநுபவிக்க வேண்டும்." வேத நூல்களில் நவிலப்பெறும் ஒழுகலாறு உலகியல் வாழ்வின்பாற் படும். அஃது அழிவிலின்பப் பெருவாழ். 9. பெ. பு : ஞானசம்பந். (801-808)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/260&oldid=856169" இலிருந்து மீள்விக்கப்பட்டது