பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஞானசம்பந்தர் வாகிய வீடுபேற்றினை அடைவிப்பது. இந்நெறி என்றும் சிதைவின்றி நிலை பெற்று நிலவும் சிவநெறியே; இந்த உண்மைகளைச் சமணர்கள் அறிய மாட்டார்கள்; அறிந் தாலும் ஒப்புக்கொள்ள உடன்படார்கள் என்பதைப் பிள்ளையார் நன்கு அறிவார். ஆயினும், திருநீறு பூசப் பெற்றுப் பழவினைப் பாசம் நீங்கி இருவினையொப்புடைய வனாய் இறைவனை அடைந்து இன்புறும் பக்குவ நிலை யுற்ற பாண்டியன் அறிதல் வேண்டும் என்ற பேரருள் உடையவர் பிள்ளையார். ஆகவே அவர், வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதுஎல் லாஅரன் காமமே சூழ்க வையக முந்துயர் நீங்கவே. (1) என்ற முதற்பாடலையுடைய மேற்குறிப்பிட்ட திருப் பதிகத்தை ஏட்டில் எழுதித் தமது அற்புதத் திருக்கரத்தால் வைகையாற்றில் இடுகின்றார். பிறவி எனும் பேராற்றை அருந்தவருள்ளம் எதிர்த்து எதிர் செல்வது போன்று அவ்வேடு வைகை வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏகுகின்றது. குலச்சிறையார் குதிரைமீது இவர்ந்து வைகை யாற்றின் கரைவழியாக அதனைத் தொடர்ந்து செல்லு கின்றார். இத்திருப்பாசுரத்தின் இரண்டாம் அடியில் வேந்தனும் ஓங்குக' எனப் பிள்ளையார் பாடியதனால் முன்பு கூனனாயிருந்த பாண்டியன் கூன் நீங்கி நின்றசீர் நெடுமாறன்’ ஆகின்றான். பிள்ளையார், தம்மால் வைகையாற்றில் இடப்பெற்ற ஏடு எதிரேறி விரைந்து செல்லக் கண்டவர் 'வன்னியும் அத்தமும் (3.32) என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்று கின்றார். 10. இப்பாடலின் பொருளைச் சேக்கிழார் பெருமான் சம்பந்தர் புராணத்தின் 822-844 பாடல்களில் அற்புதமாக விளக்குகின்றார். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/261&oldid=856171" இலிருந்து மீள்விக்கப்பட்டது