பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைமாநகர் அற்புதங்கள் 22#. வன்னியும் அத்தமும் மதிபொதி சடையினன் பொன்னியல் திருவடி புதுமல ரவைகொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடலார் ஏடகத் தொருவனே. {1} என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். இந்த ஏடு வைகை யின் வடகரையில் அமைந்துள்ள ஏடகத் திருக்கோயிலின் அருகில் தேங்கிய நீர் நடுவே வந்து நிற்கின்றது. ஏட்டினைத் தொடர்ந்து சென்ற குலச்சிறையார் குதிரையை விட்டு இறங்கி ஏட்டினை எடுத்துத் தலைமேற் கொண்டு அங்குக் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஏடகத்திறைவனை இறைஞ்சி விரைந்து மீளுகின்றார். மீண்டவர் பிள்ளையாரின் பொற்பாதங்களை வணங்கித் தாம் கொணர்ந்த ஏட்டினை நின்ற சீர் நெடுமாறன் முதலிய யாவர்க்கும் காட்டுகின்றார். அங்குள்ளார் அனைவரும் மகிழ்வுற்று இறைவனது திருவருளை வியந்து போற்று. கின்றனர். வைகையாற்றில் எதிரேறிச் சென்ற ஏடு திருவேடகத் திருக்கோயிலின் பாங்கே ஒதுங்கிய செய்தி 11. ஏடகம் (திருவேடகம்) : திண்டுக்கல் . மதுரை இருப்பூர்தி வழியில் சோழவந்தான் என்ற நிலையத்தி லிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. ஏடு தங்கிய இடம் "ஏடகம் ஆயிற்றுப் போலும்! திருக்கோயில் ஆற்றோரத்தில் உள்ளது. சம்பந்தரின் பாடல் மட்டிலும் பெற்ற தலம். பல ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்தவத்திரு சித்பவானந்த அடிகள் நிறுவிய கல்லூரி சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. இதே ஞானச் செல்வர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் திருப்பராய்த் துறையில் இராம கிருஷ்ணத் தபோவனம் என்ற ஒரு திருமடத்தையும் அதற் கருகே காவிரியின் தென்கரைப் படுகையில் விவேகாநந்த வித்யாவனம் என்ற உயர்நிலைப் பள்ளியையும் நிறுவியமை நினைவுகூரத் தக்கது. அடிகளாரின் சமய-கல்வித். தொண்டு காவியமாக எழுதத்தகும் பெற்றி வாய்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/262&oldid=856173" இலிருந்து மீள்விக்கப்பட்டது