பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.மதுரை மாநகர் அற்புதங்கள் 223 சமணர்கள் முன்னமே பிள்ளையார் தங்கியிருந்த திருமடத்தில் தீக்கொளுவி அவர்க்கும் அடியார்க்கும் தீங்கு விளைவித்தோராதலின், அவர்கள் செய்து கொண்ட சபதப்படி அவர்களைக் கழுவேறச் செய்தலேயாகும் எனக் கூறுகின்றான். காழிப்பிள்ளையார் சமணர்கள்பால் சிறிதும் பகைமை இல்லாதவராயினும், சிவனடியார்கள் இருந்த மடத்தில் தீ வைத்த காரணத்தால் அவர்கட்கு விதிக்கப்பெற்ற (அவர்களாகவே மே ற் கொண் ட) தண்டனையை விலக்காதொழிகின்றார். அமைச்சர் குலச்சிறையார் தாம் அரசுப்பணியாளர் என்ற முறைப்படி கழுத்தறிகளை நாட்ட ஏற்பாடுகள் செய்கின்றார். சமணர்கள் யாவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறக் கின்றனர். இப்போது நாம் கி.பி. நான்கு ஐந்து நூற்றாண்டுகளில் பெளத்த சமண வைதிகச் சமயப் போட்டிகள் ஒரு கட்டுப்பாடான ஒப்பந்த முறையான போட்டிகளாகவே நிகழ்ந்துள்ளன என்பதை அறிகின்றோம், தர்க்க வாதங் களும் மந்திர தந்திர வாதங்களும், ஆகாய கமனம், கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்ற பரகாயப் பிரவேசம் முதலியவை எல்லாம் எங்கும் பெருவழக்காக நிகழ்ந்தன. இத்தகைய வாதங்களிலும் போட்டிகளிலும் தோற்ற வர்கள் தாமே தம்மைத் தண்டித்துக்கொள்ள ஒப்புதல் செய்திருப்பர். சிலர் சாத்விக முறையில் எதிர்கட்சியில் சேர்ந்து கொள்வர். ம ற் ற வ ர் க ள் குன்றிலிருந்து குதித்தோ, கழுவிலேறியோ தம் உயிரை மாய்த்துக் கொள்வர். கழுவிலேறுதல் அந்தக் காலத்தில் அங்கீகரிக்கப் பட்ட ஒரு தண்டனை. ஆகையால், மதுரைச் சமணர்கள் கழுவேறினார்கள் என்பது நினைக்கத் தக்கது. சேக்கிழார் பெருமானும், எண் பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்' என்று கூறுவதும் சிந்திக்கத் தக்கது. 12. பெ. பு : ஞானசம்பந்த 855.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/264&oldid=856177" இலிருந்து மீள்விக்கப்பட்டது