பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ஞானசம்பந்தர் மேலும் இந்தக் காட்சியைக் கவிஞர் பெருமான், தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றுத் தம்பம் ஆற்றிடை அமணர் ஒலை அழிவினால் ஆர்ந்த தம்பம் வேற்றொரு தெய்வ மின்மை விளக்கிய பதாகைத் தம்பம் போற்று சீர்ப் பிள்ளை யார்தம் புகழ்ச்சயத் தம்ப மாகும்.” என்று அற்புதமாகக் காட்டுவர். கவிதையில் தம்பம்" என்ற சொல் அற்புதமாகச் சிலம்பம ஆடுவதைக் கண்டு மகிழலாம். முன்னர்ச் சம்பந்தரால் வெப்பு நீங்குவதற்காக நீறணியப் பெற்றவன் இப்போது பிள்ளையாரிடம் நீறு வாங்கித் தன் மேனி முழுதும் பூசி மகிழ்கின்றான். இதனைக் காணும் நகரமக்கள் அனைவரும் பிள்ளையார் அளித்த நீறு பெற்றுச் சிவநெறியினை மேற்கொள்ளு. கின்றனர், புறச்சமய இருள் நீங்கித் திருநீற்றின் ஒளி யாண்டும் பரவுகின்றது. அங்கயற்கண்ணியொகும் ஆலவாய் அமர்ந்துள்ள பெருமானின் திருவருளை எண்ணி உள முருகிய சண்டை வேந்தர் மதுரை வேந்தன் மாறனும் அரசமா தேவியாரும் அமைச்சரும் அடியார்களும் புடை சூழ்ந்து வர மதுரைத் திருக்கோயிலை வலம்வந்து இறைவன் திருமுன் நின்று வீடலாலவாய்' (3.52) என்னும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றுகின்றார். ஆதி யந்த மாயினாய் ஆல வாயின் அண்ணலே சோதி யந்த மாயினாய் சோதி யுள்ளோர் சோதியாய் 13. டிெ - டிெ . 856,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/265&oldid=856180" இலிருந்து மீள்விக்கப்பட்டது