பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைமாநகர் அற்புதங்கள் 225 கீதம் வாய்ந்த வாய்மையால் கிளர்த ருக்கி னார்க்கலால் ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து ரைக்க லாகுமே. (7) என்பது ஏழாவது பாடலாகும். இப்பதிகப் பாடல்கள் யாவும் படித்து இறையதுபவம் பெறத் தக்கவை. சிவநெறியினை மேற்கொண்ட நெடுமாறன் சொக்க லிங்கப் பெருமானை இறைஞ்சி சமணரது மாயையால் மதி மயங்கி மன்னுயிர்த் தலைவனான நின்னை அறியா திருந்த எளியேனை ஆட்கொள்ளும் வண்ணம் இனிய் அருளாளராகிய சம்பந்தப் பெருமானைத் தந்தருளினை" என்று நெஞ்சம் நெக்குருகப் போற்றுகின்றான். ஆளுடைய பிள்ளையார் திருமடத்திற்கு எழுந்தருளியபின் அரசனும் அரசியும் அமைச்சரும் பிள்ளையார்பால் விடை பெற்றுத் தத்தமக்குரிய திரு மாளிகையை அடைகின்றனர். பிள்ளையார் ஆலழேலுகந்த (31115) என்ற முதற் குறிப்புடைய திருவியமகப் பதிகத்தைப் பாடிப் போற்று கின்றார். ஆல நீழல் உகந்த திருக்கையே யான பாடல் உகந்த திருக்கையே பாலி னேர்மொழி யாளொரு பங்கனே பாத மோதலர் சேர்புர பங்கனே கோல நீறணி மேதகு பூதனே கோதி லார்மன மேவிய யூதனே ஆல் கஞ்சமு துண்ட களத்தனே ஆல வாயுறை அண்டர்க ளத்தனே (1) என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிள்ளையாரைச் சந்திக்கு முன்னரே நாயனார் பட்டம் பெற்று விட்டார் என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். ஒரு சமயம் பெரும் 14. பெ. பு: திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் காண்க. 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/266&oldid=856182" இலிருந்து மீள்விக்கப்பட்டது