பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 ஞானசம்பந்தர் பாணர் மதுரைக்குச் சென்று சொக்கநாதரின் கோயிலின் புறவாயிலில் நின்று யாழ் வாசிக்கின்றார். பாணர் ழ்ேக்குலத்தவராகையால் வெளியே நின்று வாசிக்கின்றார். இதைக் காணும் இறைவன் வேதியர் கனவில் யாழ்ப் பாணரை உள்ளே அழைத்து மண்டபத்தில் யாழை இயக்கச் செய்யுங்கள்' எ ன் று அறிவிக்கின்றார். அங்ங்ணமே பாணர் உள் மண்டபத்தில் தரையில் அமர்ந்து வாசிக்கும்போது பாணர் யாழ் நிலத்தில் பட்டால் குளிர் தாக்கி அதன் சுருதி கலையும். ஆதலின் அவருக்கு ஒரு பலகை இடுங்கள்' என்று அந்தரத்து ஒசை எழுகின்றது. உடனே வேதியர்கள் ஒரு பலகை தந்து மரியாதை செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியை மேற் குறிப்பிட்ட பதிகத்தின், கக்க மேகுவர் நாடுமோ ரூருமே நாதன் மேனியின் மாசுண மூருமே தக்க பூமனைச் சுற்றக் கருளொ.ே தாரம் உய்த்தது பாணற் கருளொடே மிக்க தென்னவன் தேவிக் கணியையே மெல்ல கல்கிய தொண்டர்க் கணியையே அக்கி னாாமு துண்கலனோடுமே ஆல வாயர னாருமை யோடுமே. (6) என்ற ஆறாம் பாடலில் தக்கபூமனைச் சுற்றக் கரு ளொடே தாரம் உய்த்தது பாணர்க் கருளொடே என்ற தொடரால் குறிப்பிடுவதைக் கண்டு மகிழலாம். இங்ங்ணம் அருள் பெற்ற சிறப்புடைய பெரும்பாணருடன் அளவளாவி மகிழ்கின்றார் திருமடத்தில், மேலும் பாண்டிமாதேவியின் மங்கல நாணைப் பாதுகாத்தருளிய இறைவனின் பெருங்கருணைத் திறமும் மிக்க தென்னவன் தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு 15. டிெ டிை 3, 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/267&oldid=856184" இலிருந்து மீள்விக்கப்பட்டது