பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைமாநகர் அற்புதங்கள் 227 அணியையே என்ற தொடரால் உளமுருகிப் போற்றி யுள்ளமை ஈண்டு நினைக்கத் தக்கது. சண்பை வேந்தர் மதுரையில் தங்கியிருக்கும் நாளில் அவரைக் காணும் ஆசையால் அவருடைய திருத் தந்தையார் ம. து ைர வருகின்றார். அப்பொழுது பிள்ளையார் மண்ணினல்ல வண்ணம் (3-24) என்ற திருப் பதிகம் பாடிப் போற்றுகின்றார் (இது கழுமலம் பற்றிய பதிகம்). இதில், மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணினல் ல:துறும் கழுமல வளங்கர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே. (1) என்பது முதல் பாடல். பாடல்தோறும் பெருந்தகை இருந்த திறத்தை உசாவுவது தந்தையின் நலத்தைத் தணயன் உசாவுவதுபோல் நம் உள்ளத்தை உருக்கு இன்றது. குழந்தைப் பருவத்தில் பொற்கிண்ணத்தில் பால டிசில் ஊட்டி என்னை ஆட்கொண்டருளிய தோணி புரப் பெருந்தகை எம்பெருமாட்டியுடன் இனிதிருந்ததே என்று கழுமலப் பெருமானின் நலம் உசாவுகின்றார். திருவாலவாயுடையானைக் காலம்தோறும் வழிபட்டு மதுரையில் தங்கியிருந்த பிள்ளையார் பாண்டிய நாட்டி லுள்ள ஏனைய தலங்களையும் சேவிக்கச் செல்லுகின்றார். அவரைப் பிரிந்துறைதலாற்றாத பாண்டியனும், பாண்டி மாதேவியும், குலச்சிறையாரும் " அவருடன் தொடர்ந்து 16. இந்த மூவரும் நாயனார் நிலைக்கு உயர்ந்த வர்கள் (பெரிய புராணம் காண்க). -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/268&oldid=856186" இலிருந்து மீள்விக்கப்பட்டது