பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ஞானசம்பந்தர் வானிற் பொலிவெய்தும் மழைமேகம் கிழிந்தோடிக் கூனற் பிறைசேரும் குளிர்சாரல் கொடுங்குன்றம் ஆணிற் பொலிவைந்தும் அமர்ந்தாடி உலகேத்தத் தேனிற் பொலிமொழியா ளொடுமேயான் திருககரே. (1) என்பது முதற் பாடல். இத் திருப்பதிகப் பாடல்களில் குறிஞ்சி திலக் கருப்பொருள்கள் நிறைந்த இயற்கைக் காட்சியைக் கண்டு மகிழலாம். இரண்டாம் நிலை : மதுரை மாநகர் நிகழ்ச்சிகள் வெற்றியுடன் நிறைவு பெற்ற பிறகு சேவித்த தலங்கள் இந்நிலையில் அடங்குகின்றது. மதுரையிலிருந்து திருப்பரங் குன்றம் வருகின்றார். வந்தவர் டேலர் சோதி (1.100) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடி பரங்குன்றுப் பரமனைப் போற்றுகின்றார். இதில், 2. பரங்குன்றம் (திருப்பரங்குன்றம்): மதுரை - விருது நகர் இருப்பூர்தி வழியில் திருப்பரங்குன்றம் என்ற நிலை யத்திலிருந்து ; கல் தொலைவு. மதுரையிலிருந்து பேருந்து மூலம் வருவது நலம். கோயில் மலைச் சரிவில் உள்ளது. முருகப் பெருமான், சிவபெருமான், திருமால் முதலியோர் இருக்கும் கோயிற்பகுதி அருமையான நுட்பம் செறிந்த சிற்பம் நிறைந்தது. நக்கீரர் திருமுருகாற்றுப்படை விண்ணப் பித்த தலம். அவர் சிவ வழிபாடு செய்த சரவணப் பொய்கை திருக்கோயிலுக் கருகிலுள்ளது. தெய்வயானைத் திருமணம் நடைபெற்ற தலம். தெய்வயானை மட்டிலும் முருகனின் இடப்பாகத்தில் நாச்சியாராக உள்ளார். கிருத்திகைதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடு கின்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் மூவேந்தருடன் வழி பட்டதைப் பாசுரம் 7:2:11 கூறும். குடைவரைக் கோயில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/271&oldid=856194" இலிருந்து மீள்விக்கப்பட்டது