பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு பாண்டி நாட்டுச் சிவத்தலங்கள் பதினான்கு. இவற்றைச் சம்பந்தர் பெருமான் இரு நிலைகளில் வழி படுகின்றார். முதல்நிலை : திருமறைக்காட்டிலிருந்து அப்பர் பெரு மானிடம் விடை பெற்று மதுரை ஏகும்போது ஒரு தலத்தை வழிபடுகின்றார். அது திருக்கொடுங்குன்றம்' என்பது. கொடுங்குன்றப் பெருமான்மீது வானிற் பொலி (114) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் போற்று கின்றார் 1. கொடுங்குன்றம் (பிரான் மலை) : காரைக்குடி பிலிருந்து 27 கல் தொலைவு. காரைக்குடியிலிருந்து திருப்புத்துரர் வரையிலும், திருப்புத்துாரிலிருந்து சிங்கம் புணரி வரையிலும் பேருந்துப் பயணம். சதுர்வேதிமங்கலம் (மட்டியூர்) என்னும் இடத்தில் இறங்கி 5 கல் தொலைவு மாட்டுவண்டியில் செல்லவேண்டும். மலையின் உயரம் 2452 அடி. திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் பேருந்துப் பயணம் செய்து (30 கல்) பள்ளப்பட்டியில் இறங்கி 3 கல் தொலைவு மாட்டுவண்டியில் சென்று இத் தலத்தை அடையலாம். பாடல் பெற்ற தலம் மலையடி வாரத்தில் உள்ளது. மலையின்மேல் வயிரவர் கோயிலும் சிவன் கோயிலும் உண்டு. சம்பந்தர் மட்டிலும் பாடிய தலம். பாரி என்னும் குறுநில மன்னனுக்குச் சொந்தமான .lt) 63)©Q}.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/270&oldid=856192" இலிருந்து மீள்விக்கப்பட்டது