பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 ஞானசம்பந்தர் அணியும் புனலானை அணியாப்ப னுாரானைப் பணியு மனமுடையார் வினைங்பற் நறுப்பாரே. (4) என்பது கான்காவது பாடல். ஆப்பனூர் அப்பனிடம் விடை பெற்றுக் கொண்டு திருப் புத்துார் வருகின்றார் திருஞானக் கொழுந்து வந்தவர் இத் தலத்துப் பெருமானை வெங்கல் விம்மு (1.25) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி வழிபடுகின்றார். இதில், கெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்கும் செய்கண் மல்கு சிவனார் திருப்புத்துார்த் தையல் பாக மகிழ்ந்தார் அவர்போலும் மையுள் கஞ்ச மருவு மிடற்றாரே. - (7) என்பது ஏழாம் திருப்பாடல். திருப்புத்துார் எம்பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருப்பூவணம் வருகின்றார். இத்தலத்து இறைவனை இரண்டு செந்தமிழ்ச் சொல்மாலையால் வழி படுகின்றார் சண்பை வேந்தர். அறையார் புனலும் (1.64) என்ற முதற்குறிப்புடையது முதல் மாலை. இதில், 4. புத்தூர் (திருப்புத்துார்): காரைக்குடி இருப்பூர்தி நிலையத்திலிருந்து 13 கல் தொலைவு. நகரப் பேருந்து மூலம் ஊருக்கு வந்து அங்கிருந்து வேறு பேருந்து மூலம் திருப்பத்துர் போகலாம். திருப்பத்துார் பெரிய பேருந்து சந்திப்பு. பல திசைகளிலும் பேருந்துகள் வரும், போகும். இங்கு வைரவர் சந்நிதி சிறப்புடைத்து. - 5. பூவணம் (திருப்பூவணம்): மதுரை . மானாமதுரை இருப்பூர்தி வழியில் திருப்புவனம் என்ற நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. வையை யாற்றங்கரையிலுள்ளது. தமிழ் வேந்தர் மூவரும் வழிபட்ட தலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/273&oldid=856198" இலிருந்து மீள்விக்கப்பட்டது