பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு 233 போரார் மதமா வுரிவை போர்த்துப் பொடியணி மேனியனாய்க் காரார் கடலின் கஞ்ச முண்ட கண்ணுதல் விண்ணவனுர் பாரார் வைகைப் புனல்வாய் பரப்பிப்பன் மணிபொன் கொழித்துச் சீரார் வாரி சேர நின்ற திருப்பூ வணமே. (4) என்பது கான்காம் நறுமலர். அடுத்த மாலை மாதமர் மேனி யனாகி (3.20) என்ற முதற் குறிப்புடையது. இதில், வெறிகமழ் புன்னை பொன்ஞாழல் விம்மிய பொறியர வணிபொழில் பூவ ணத்துறை கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன் நறுமலரடி தொழ கன்மை யாகுமே. (6) என்பது ஆறாவது வாடா நறுமலர். திருப்பூவணத் திறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு கானப்பேர்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். பிடி யெலாம் பின்செல (3.26) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலையால் வழிபடுகின்றார். இதில், 6. கானப்பேர் (காளையார் கோயில்): திருச்சி.மானா மதுரை இருப்பூர்தி வழியில் நாட்டரசன்கோட்டை என்ற நிலையத்திலிருந்து தேவகோட்டை போகும் பேருந்து வழியில் 5 கல் தொலைவிலுள்ளது. சுந்தரர் கனவில் காளை யாகத் தோன்றித் தாம் இருப்பது கானப்பேர் என்று கூறி அவரை வழிபடச் செய்து பதிகம் பெற்ற படியால் காளையார் கோயில் என்பது தலப் பெயராயிற்று. கோயிலும் திருக்குளமும் பெரியவை. காளையீசுவரர், சுந்தரேசுவரர், சோமேசுவரர் ஆகிய மூன்று சந்நிதிகள் உள்ளன. ஐராவதம் பூசித்து சாப விமோசனம் பெற்றதை 3.26:7 என்ற பாசுரம் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/274&oldid=856201" இலிருந்து மீள்விக்கப்பட்டது