பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஞானசம்பந்தர் கிறையுடை கெஞ்சுளும் ருேளும் பூவுளும் பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும் கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர் குறையுடையவர்க்கலாற் களைகிலார் குற்றமே. (4): என்பது கான்காவது வாடாத நறுமலர். கானப்பேர் அண்ணவிடம் விடைபெற்றுக் கொண்டு திருச்சுழியல்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார்; சுழிய லீசனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). திருச்சுழியலி லிருந்து திருக்குற்றாலம் வருகின்றார் பிள்ளையார். இத்தலத்து இறைவனை சம்பந்தர் இரண்டு செந்தமிழ் மாலைகளால் வழிபடுகின்றார். முதல் மாலை வம்பார் குன்றம் (1.99) என்ற முதற்குறிப்புடையது. இதில், 7. சுழியல்: மதுரை இருப்பூர்தி சந்திப்பிலிருந்து 24 கல் தொலைவு. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைப் பேருந்து மூலம் 17 கல் தொலைவு சென்று அங்கிருந்து வேறொரு பேருந்து மூலம் 7 கல் தொலைவு பயணம் செய்து இத்திருத்தலத்தை அடையலாம். (அருப்புக் கோட்டைக்கு விருதுநகரிலிருந்து 12 கல் தொலைவு பேருந்தில் வந்து அங்கிருந்து மேற்கூறியபடி 7 கல் சென்று அடையலாம்.) 8. குறும்பலா, குற்றாலம்: தென்காசி இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3; கல் தொலைவு. இறைவன் சுந்தரருக்குக் கட்டமுது வழங்கியதை 7.29:3 (சுந்தரர்). என்ற பாசுரம் கூறும். இங்குள்ள சாரல் அருவி முதலிய வற்றை அநுபவிக்க சூலை, ஆகஸ்டு மாதங்களில் மக்கள் திரண்டு வருவர். ஒரே சமயம் கோயிலுக்கருகிலுள்ள நீரருவியில் 500 பேர் நீராடுவதற்கு வசதி செய்யப் பெற். றுள்ளது. மலைமேலுள்ள சண்பகாடவி யருவியும் தேனரு வியும் 3 கல் தொலைவிலுள்ள ஐந்தருவியும் நெடுநேரம் அமைதியாக நீராடுவதற்கு வசதி. அகத்திய முனிவர் திருமால் உருவைக் குறுகச்செய்து சிவலிங்கமாக்கியதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/275&oldid=856203" இலிருந்து மீள்விக்கப்பட்டது