பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:252 ஞானசம்பந்தர் திற்குப் பதிகம் இல்லை). பின்னர் நாவுக்கரசரின் திருமடத்தில் எழுந்தருளுகின்றார் பிள்ளையார். நாவேந்தர் சண்பைவேந்தரை நோக்கி, போக்கும்வரவுமாகிய நிகழ்ச் சியை வினவுகின்றார். காழிவேந்தரும் பாண்டி நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளனைத்தையும் ஆதியோடந்தமாக அப்பர் பெருமானுக்கு விரித்துரைக்கின்றார். இவற்றைச் செவிமடுத்த நாவுக்கரசர் பிள்ளையாரை அடி வணங்கி, வாழி திருத்தொண்டென்னும் வான் பயிர் தான் ஓங்கு தற்குச் சூழும் பெருவேவியானிர் என்று புகழ் மாலை சூட்டுகின்றார். அ ன் பி ன் பெருவெள்ளம் அனைய மங்கையர்க்கரசியாரின் மாட்சியையும், குலச்சிறையாரின் தொண்டின் சிறப்பினையும் பிள்ளையார் எடுத்துரைக் கின்றார். இவ்விருபெருமக்களின் திருத்தொண்டினைக் கேட்டு மகிழ்ந்த நாவேந்தர் அவ்விருவர் தொண்டினையும் ஏற்று மகிழும் ஆலவாயிறைவனைப் பணிந்து வழிபடும் பெருவிருப்பால் உந்தப்படுகின்றார். அப் பர் டி களும் தொண்டை நாட்டின் சிறப்பினைப் பிள்ளையாருக்குச் சொல்ல, அவரும் சான்றோர்கள் வதியும் அந்நாட்டின் திருத்தலங்களை வழிபடப் பேரார்வமுறுகின்றார். வாகீசர் பிள்ளையார்பால் விடைபெற்றுப் பாண்டி நாட்டை நோக்கிப் புறப்படுகின்றார்.20 காழிவேந்தரும் அடியார்களுடன் காவிரியின் வட கரையை அடைகின்றார். அக்க்ரையிலுள்ள சில தலங்களை வழிப்படுகின்றார். முதலில் நெய்த்தானம் வருகின்றார். சுவாமிகள் இங்குத் திருமடம் அமைத்துப் பல பொதுப் பதிகங்கள் அருளினார். அத்திருமடச் சிதைவு இன்றும் உள்ளது. பாண்டி நாட்டிலிருந்து திரும்பிய பிள்ளையார் அப்பரைச் சந்தித்து அளவளாவுகின்றார். சம்பந்தர் பதிகம் இல்லை. ... 20. இவர்தம் பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாட்டை *காவுக்கரசர் என்ற நூலில் உரிய இடத்தில் கண்டு தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/293&oldid=856246" இலிருந்து மீள்விக்கப்பட்டது