பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (3) 25} தங்கியிருக்கும் நாளில் அப்பர் எங்குற்றார்?' என அடியார்களை வினவுகின்றார். அவர்கள் அப்பெருமான் பூந்துருத்தியிலிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அவரைக் காணும் பெருவிருப்புடன் பல தலங்களை வணங்கிச் செல்லும் நிலையில் காவிரியின் தென்கரையை அடை கின்றார்; திருப்பூந்துருத்தியை நோக்கி விரைகின்றார். பிள்ளையாரின் வருகையை முன்னதாகவே அறிந்த அப்பரடிகள் திருப்பூந்துருத்தி எல்லைக்கே வந்துவிடுகின் றார். வந்தவர் தொண்டர் கூட்டத்துடன் தாமும் ஒரு வராகக் கலந்து பிள்ளையாரின் முத்துச் சிவிகையைத் தாங்கி வருகின்றார். இந்நிலையில் பிள்ளையாரின் நெஞ்சில் ஒருவகை உணர்ச்சி எழுகின்றது. அப்பர்தாம் எங்கும் றார் இப்பொழுது!" என அடியார்களை வினவுகின்றார். இவ்வுரை கேட்ட வாகீசப் பெருமான் நெஞ்சம் நெக்குருகி நின்று இவ்வாறு செப்புவர் :

  • ஒப்பரிய தவஞ்செய்தேன்

ஆதலினால் உம்மடிகள் இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்." என்கின்றார். பிள்ளையார் வி ைர ந் து சிவிகையை விட்டிழிந்து இவ்வாறு செய்தருள்வதென்னை? எனக் கூறி அப்பரடிகளை வணங்குகின்றார். அப்பர் பெருமானும் "ஞானசம்பந்தருக்கு எளியேனாற் செய்யத்தக்கது வேறு யாதுளது? " எனக்கூறி உடன் வணங்குகின்றார். அவண் இருந்த தொண்டர்கள் அனைவரும் இப்பெருமக்களின் நண்பின் திறத்தைக் கண்டு மனமுருகி இறைஞ்சிப் போற்று கின்றனர். - இருபெரு அடியார்களும் பூந்துருத்திக் கோயிலுக்கு வந்து பூந்துருத்திப் பெருமானைப் பணிகின்றனர். (தலத் 18. பெ. பு : ஞானசம்பந். 1935, 19. பூந்துருத்தி (திருப்பூந்துருத்தி): தஞ்சையிலிருந்து 8 கல் தொலைவு. சப்தஸ்தான தலங்களுள் ஒன்று. அப்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/292&oldid=856243" இலிருந்து மீள்விக்கப்பட்டது