பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 ஞானசம்பந்தர் புத்தர் சமண்க முக்கையர் பொய்கொளார் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின. வித்தக நீறணிவார் வினைப்பகைக் . கத்தர மாவன அஞ்செழுத்துமே. (3:22:10) என்ற திருப்பாட்டினை யோதி அவன் தலைமீது இடிவிழ: என வெகுண்டுரைக்கின்றார். அன்பர் கூறிய மந்திர வாக்கின் மகிமையால் இடி விழவே அவன் தலை உடலி ளின்றும் அறுபட்டு வீழ்கின்றது. இதனைக் கண்டு திடுக்கிட்டு அஞ்சிய புத்தர்கள் சிதறுண்டு ஓடுகின்றனர். அஃதுணர்ந்த பிள்ளையார் அடி யார்களை நோக்கி அரண் நாமமே ஒதுமின்' என்று பணிக் கின்றார். அரகர முழக்கங் கேட்ட புத்தர்கள் மீண்டும் கூட்டமாகக் கூடிச் சாரிபுத்தன் என்பவனை அழைத்து வந்து பிள்ளையாரை அணுகி மந்திர வாதமின்றி தருக்க வாதமே புரியவேண்டும் என்கின்றனர். பிள்ளையாரும் அதற்கு இசைந்தருளுகின்றார். சந்திர மண்டபத்தில் சிவனடியார்களும் புத்தர்களும் ஒருங்கு கூடுகின்றனர். சம்பந்த சரணாலயரும் சாரிபுத்தனும் நிகழ்த்திய வாதத்தில் சாரிபுத்தன் தோல்வியுறுகின்றான். அது கண்டு அங்குள்ள புத்தர்கள் அனைவரும் பிள்ளையார் திருவடி 蘇發發訂 வணங்கி சைவர்களாகின்றனர். இங்ங்னம் பிள்ளையார் தம் அடியார்களைக் கொண்டு புத்தரை வாதில் வென்ற செய்தியை சேக்கிழார் அற்புதமாக விரித்துரைக்கின்றார். அப்பரைக் காணல் : போதிமங்கையில் சிவநெறி பரப்பிய சண்பைவேந்தர் திருக்கடவூர் வருகின்றார். இறைவனை வழிபடுகின்றார். இஃது இரண்டாவது தடவைப் புரிந்த வருகை (பதிகம் இல்லை). கடவூரில் 16. பெ. பு : ஞானசம்பந். 908 - 925. 17. அப்பர் பெருமானுடன் தலவழிபாடு (கட்டுரை . 8) -இந்நூல் பக். 156 காண்க. . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/291&oldid=856242" இலிருந்து மீள்விக்கப்பட்டது