பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (3) 249 குவளை பொற்கண்ணி துண்ணென் வந்து குறுகிய கவள மால்கரி யெங்ங்ண் கீர்கையிற் காய்ந்ததே, (6) என்பது ஆறாவது திருப்பாடல். புத்தரை வாதில் வென்றது: திருத்தெளிச்சேரியை வழி பட்டுத் தெளிச்சேரியின் அருகிலுள்ள போதிமங்கை என்ற பெளத்தமடத்தின் அருகே வரும்போது “பரசமயக் கோளரி வந்தார் என்று முழக்கமிட்டுச் சின்னம், காளம் முதலிய பல்லியங்களை இயம்பி ஆரவாரிக்கின்றனர். இந்த முழக்கத் தையும் ஆரவாரத்தையும் கேட்கப் பொறாத புத்தர்கள் தம் சமயக் கல்வியில் மேம்பட்ட புத்த நந்தி என்பவனை யடைந்து நிலைமையினை விளக்கி முறையிடுகின்றனர்" இச்செய்தியை அறிந்து உளங்கனன்ற புத்த நந்தி என்பான் தேரர் கூட்டத்துடன் அங்கு விரைந்து வருகின்றான். சிவனடியார்களை நோக்கி, நீங்கள் எங்களை வாதில் வென்ற பின்னரன்றோது.மது வெற்றிக்கு அடையாளமாகிய சின்னம் முதலியவற்றைப் பிடித்தல் வேண்டும்' எனக் கூறித் தடுத்து நிறுத்துகின்றான். இதனைக் கேட்டு மனம் பொறாத அடியார்கள் அந்நிகழ்ச்சியைப் பிள்ளையாரிடம் தெரிவிக்கின்றனர். இதனைக் கேட்ட பிள்ளையார் :புத்தர்கள் வாதிற் பொருமிடத்து அறிவோம்" என்று அமைதியாகக் கூறுகின்றார். இந்நிலையில் பிள்ளையார் அருளும் பதிகங்களை அவ்வப்போது எழுதிக் கொண்டு வரும் சம்பந்த சரணாலயர் என்பவர் புத்த நந்தியின்மீது ஆத்திரப்பட்டு, 15. அந்தக் காலத்தில் நாகப்பட்டினம் முதலிய கீழ்க்கரைப்பட்டினங்களில் பெளத்தர்கள் பலர் மடம் அமைத்து வாழ்ந்து வந்தனர். இத்தகைய மடங்களில் ஒன்றுதான் போதிமங்கை'. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/290&oldid=856240" இலிருந்து மீள்விக்கப்பட்டது