பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ஞானசம்பந்தர் பூவினில் வாசம் புனலிற் பொற்பு புதுவிரைச் சாந்தினி நாற்றத்தோடு காவினிற் பாடல் நள்ளா றுடைய நம்பெருமா னிது என் சொல்லாய் தேவர்கள் தானவர் சித்தர்விச் சாதரர் கணத்தோடும் சிறந்து பொங்கி ஆவினி லைந்துகந் தாட்டுங் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த வாறே. (4) என்பது நான்காம் திருப்பாடல். நள்ளாற்றிறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு தெளிச்சேரி' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்தவர் பூவலர்ந்தன கொண்டு (2,3) என்ற முதற் குறிப் பினையுடைய திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்று கின்றார். இதில், தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல் திவள மாமணி மாடக் திகழ்தெளிச் சேரியீர்! 14. தெளிச்சேரி (கோயில்பத்து): பேரளம்-காரைக் கால் இருப்பூர்தி வழியில் காரைக் கோயில் பத்து" என்ற நிலையத்திலிருந்து கல் தொலைவு. சம்பந்தர் திருக் கூட்டத்தார், பரசமய கோளரிவிந்தார் என்று விருது கூறிச் செல்வதைத் தடுத்த புத்தர்கள் தலையில் இடிவிழும் படியாகத் திருமுறை எழுதும் தொண்டர் 3.22:10 என்ற பாடலை ஒதியவுடன் அவ்வாறே இடி விழுந்தது. பிறகு அவர்களுட் சிலரோடு வாதம் செய்து இத்தொண்டரே வென்றார். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/289&oldid=856234" இலிருந்து மீள்விக்கப்பட்டது