பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (3) 247 முக்கட் புனிதனே!" என்று பரவிப் போற்றுகின்றார். இப் பதிகத்தின் பாடல்தோறும் செல்ல வுந்துக சிந்தையார் தொழ, நல்கு மாறருள் நம்பனே' என ஈரடி மேல் வைப்பாக வரும் தொடரால் நன்கு புலனாகின்றது. பிள்ளையார் இப்பதிகத்தைப் பாடின அளவில் அவர் ஏறி வந்த ஒடம் கொள்ளம் பூதூர்க் கரையினை அணைந்தது. என்பது, . ஒடம் வந்தனையும் கொள்ளம் பூதூர்.' (6) ஆறு வந்தணையும் கொள்ளம் பூதூர்." (7) என்று வரும் ஆறாவது, ஏழாவது பாடல்களின் தொடர் களால் அறிய முடிகின்றது. கொள்ளம் பூதூர் இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு திருநள்ளாறு வருகின்றார். இது பிள்ளையாரின் இரண்டாவது முறை வருகையாகும். முதல் முறை வந்தது சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணத்தின் போது. (2) - இப்பொழுது பாடக மெல்லடி (17) என்ற திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவனை வழுத்துகின்றார். 12. கள்ளாறு : பேரளம் - காரைக்கால் இருப்பூர்தி வழியில் திருநள்ளாறு என்ற நிலையத்திலிருந்து கல் தொலைவு. காரைக்காலிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு. சப்த விடங்கங்களுள் இது நகவிடங்கர்; உன்மத்த நடனம். மதுரையில் அனல் வாதத்தில் இந்தவூர் போக மார்த்த பூண்முலையாள் (1.49) என்ற பதிகம் எரியாமல் நின்று பச்சைப் பதிகம்" எனப் பெயர் பெற்றது. நளன் பூசித்து கலி நீங்கப் பெற்ற தலம். சனி பெயர்ச்சியின்போது அது பெருவிழாவாகக் கொண்டாடப் பெறும். இலட்சக் கணக்கான மக்கள் கூட்டம் திரளும், சனி பகவான் தங்கக் காக்கை வாகனத்தில் வீதி வலம் வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். 13. இந்நூல் பக். 145. காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/288&oldid=856232" இலிருந்து மீள்விக்கப்பட்டது