பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ஞானசம்பந்தர் அடியார்களை ஏற்றித் தாமும் ஏறுகின்றார். நாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர் தமைக் கொட்டமே கமழும் (3.6) என்ற திருப்பதிகம் பாடிக் கொள்ளம் பூதுரர் இறைவனைப் போற்றுகின்றார். கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர் கட்ட மாடிய கம்பனை உள்க செல்ல வுந்துக சிந்தை யார்தொழ கல்கு மாறருள் நம்பனே. (1) ஒடம் வந்தனையும் கொள்ளம் பூதூர் ஆடல் பேணிய அண்ணலை உள்கச் செல்ல வுந்துக சிங்தை யார்தொழ கல்கு மாறருள் கம்பனே. (6) ஆறு வந்தணையும் கொள்ளம் பூதூர் ஏறு தாங்கிய இறைவனை யுள்கச் செல்ல வுந்துக சிங்தை யார்தொழ கல்கு மாறருள் நம்பனே. (7) என்பன முதல், ஆறு, ஏழாம் பாடல்கள். பிள்ளையாரின் நாவன்மையே கோலாக இருந்து ஒடத்தை இயக்குகின்றது. எடுத்த திருப்பதிகம் நிறைவு பெறுவதற்குள் ஒடம் எதிர்க் கரையை அடைந்து விடுகின்றது. அடியார்களுடன் கொள்ளம் பூதுாரை படைந்த பிள்ளையார் ஆற்றில் ஒடம் செல்லும் வண்ணம் தமக்கு அருள் புரிந்த பெருமானை நோக்கி, தோணுவே! ஆற்றின் கண் ஒடம் உய்க்கும் தன்மையால் அருள் தந்த தலைவா! நாகப் பூணினாய்! களிற்றுரிவை போர்த்த 11. தில்லையில் சேந்தனார் திருப்பல்லாண்டு பாட , சேற்றில் அழுந்திய திருத்தேர் ஆட்கள் இழுக்காமல் நகர்ந்து நிலை வந்து சேர்ந்தமை ஈண்டு நினைத்தல் தகும் (ஒன்பதாந் திருமுறை).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/287&oldid=856230" இலிருந்து மீள்விக்கப்பட்டது