பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் (3) 245 ஒடம் உய்த்தல் : பாதாளிச்சரப் பரமனிடம் விடை பெற்றுக் கொண்டு திருக்கொள்ளம் பூதுனர்? வர நினைக் கின்றார். அப்பொழுது முள்ளியாற்றில் வெள்ளம் பெருக் கெடுத்தோடுகின்றது. மலைவளர்சங் தனமகிலும் தேக்கும் உந்தி மலர்ப்பிறங்கல் வண்டிறைப்பச் சுமந்து பொங்கி அலைபெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஒடம் கிலைபுரியும் ஓடக்கோல் நிலையி லாமை நீர்வாழ்நர் கரையின்கண் நிறுத்திப் போகக் கலையிலும் கவுணியர்கோன் அதனைக் கண்டு(அ)க் கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை." என்று வெள்ளப் பெருக்கை வருணித்திடுவர் சேக்கிழார் பெருமான். பெரிய வெள்ளம். ஆதலால் ஒடம் விடுவோர் ஒடங்களைக் கரையிலே பிணித்து விட்டுப் போய்விட்டனர். கரையில் நின்ற ஞானக் கன்றுக்கு ஆற்றுக்கு அப்பான் தோன்றும் கொள்ளம் பூதுர் சென்று அங்குக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் தொழ வேண்டும் என்ற பேரார்வம் மனத்தில் உந்துகின்றது. கரையில் கட்டப் பெற்றிருந்த ஒடத்தைக் கட்டவிழ்த்து 9. கொள்ளம் பூதூர் (திருக்களம்பூர்): தஞ்சை . நாகூர் இருப்பூர்தி வழியில் கொரடாச்சேரி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. கோயிலின் பக்கத்தில் ஒடுகின்ற முள்ளி யாற்றுக்கு எதிர்க் கரையில் சம்பந்தர் வந்தபோது வெள்ளம் போயிற்று. ஒடக் கோல் நிலைக்காமையால் ஒடத்தைக் கரையிலுள்ள மரத்தில் கட்டிவிட்டு ஒடக்காரன் வீட்டிலிருந் தான். சம்பந்தர் ஒடத்தை அவிழ்த்து விட்டு ஏறிக்கொண்டு *கொட்டமே கமழும் (3.6) என்னும் பதிகம் பாட நாவலமே கோலாக ஓடம் கோயிலருகிற் சேர்ந்தது. இஃது ஐப்பசி அமாவாசையன்று உற்சவமாக நடைபெறுகின்றது. 10. பெ. பு : திருஞானசம்பந்-897.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/286&oldid=856228" இலிருந்து மீள்விக்கப்பட்டது