பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o - ஞானசம்பந்தர். என்பது முதற் பாடல். இதில் இராமன், இலக்குவன், அநுமன் முதலியோர் பூசித்த செய்தி கூறப்பெற்றுள்ளது. இப்பதிகத்தில் 5, 6ஆம் பாடல்கள் காணப்பெறவில்லை. இரண்டாம் நிலை: குலச்சிறையார் பிறந்தவூராகிய மணமேற்குடித் தங்கலுடன் பாண்டிநாட்டுப் பயணம் நிறைவு பெற்றுச் சோழநாட்டுக்குள் அடி எடுத்து வைக் கின்றார். முதலில் திருக்களர்' என்ற தலத்திற்கு வருகின்றார். இறைவனை வழிபடுகின்றார்; (பதிகம் இல்லை. இஃது இரண்டாம் முறை வருகை). திருக்களர் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு பாதாளிச்சரம் வருகின்றார். மின்னியல் செஞ்சடை (1.108) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். நாகமும் வான்மதியுங் கலமல்கு செஞ்சடை யான்சாமம் போகநல் வில்வரையாற் புரமூன் றெரித்து கந்தான் v. தோகைகன் மாமயில்போல் வளர்சாயல் துன்மொழி யைக்கூடப் பாகமும் வைத்துகங் தானுறை - . கோயில் பாதாளே. (3) என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல். 6. பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு (கட்டுரை.11) இந்நூல் பக். 229 காண்க. 7. முதல் முறை வந்தது அப்பருடன். இந்நூல் பக். 156 காண்க. பெ. பு. ஞானசம். 575. . - 8. பாதாளிச்சரம் : மன்னார்குடியிலிருந்து 1; கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/285&oldid=856226" இலிருந்து மீள்விக்கப்பட்டது