பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயனம் (3) 243. கடிக்குளத்திறைவனிடம் விடை பெற்றுக்கொண்டு இடும்பாவனம் என்ற திருத்தலத்தை அடைகின்றார் திருஞானக் கன்று. மனமார்தரு (1.17) என்ற திருப்பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். கிறேறிய திருமேனியர் நிலவும்.உல. கெல்லாம் பாறேறிய படுவெண்டலை கையிற்பலிவாங்கக் கூறேறிய மடவானொரு பாகம்மகிழ் வெய்தி ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே. (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது திருப்பாடல். இடும்பாவனம் ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவுசாத்தானம்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். *திரிடைத்துயின்றவன் (3.33) என்ற திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். இதில், நீரிடைத் துயின்றவன் தம்பிள்ே சாம்புவான் போருடைச் சுக்கி ரீவன்னது மான்தொழக் காருடை கஞ்சுண்டு காத்தருள் செய்தனம் சீருடைச் சேகூர்வாழ் திருவுசாத் தானமே. (1) நான்கு கல் தொலைவு, சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 4. இடும்பாவணம்: பாண்டி என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். - 5. உசாத்தானம் (கோயிலூர்) : மயிலாடுதுறை. காரைக்குடி இருப்பூர்தி வழியில் முத்துப்பேட்டை என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு; இங்கு சங்கர வேதாந்திகள் மடம் ஒன்றுள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/284&oldid=856224" இலிருந்து மீள்விக்கப்பட்டது