பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 ஞானசம்பந்தர் தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன் எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் புரிந்ததுவும் உமையா ளொர்பாகம் புனைதலே. (6) என்பது இப்பதிகத்தின் ஆறாவது பாடல். அகத்தியான் பள்ளி இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு கோடி வருகின்றார்; இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). கோடிக் குழகரிடம் விடைபெற்றுக் கொண்டு கடிக்குளம்' என்ற தலத்திற்கு வருகின்றார். பொடிகொள் மேனி (2.104) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை வழுத்துகின்றார். விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும் மண்க ளார்துதித் தன்பரா யின்புறும் வள்ளலை மறுவித்தம் கண்க ளார்தரக் கண்டு நங்கடிக் குளத்துறைதரு கற்பகத்தைப் பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே. (2) என்பது இப்பதிகத்தின் இரண்டாவது பாடல். 2. கோடி (குழகர் கோயில், கோடிக்கரை): கோடிக் கரை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவி லுள்ளது. சுந்தரர் பாடல் மட்டிலும் பெற்ற தலம், 3. கடிக்குளம் (கற்பகனார் கோயில்): மயிலாடுதுறை. காரைக்குடி இருப்பூர்தி வழியில் பாண்டி நிலையத்திலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/283&oldid=856221" இலிருந்து மீள்விக்கப்பட்டது